கொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி
சென்னை: கொரோனா தொற்று காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பூரண குணமடைந்து இன்று மீண்டும் புதுச்சேரி திரும்பினார்.
புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்ற மறுதினம் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ரங்கசாமிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த ரங்கசாமி இன்று தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இன்று மாலை அவர் புதுச்சேரி வந்தடைந்தார், ரங்கசாமியின் வருகையையொட்டி என் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மாநில எல்லையில் தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.
மருத்துவமனையிலிருந்து நேராக திலாஸ்பெட் அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த ரங்கசாமி, அதன் பிறகே வீட்டுக்குச் சென்றார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி முதலமைச்சர் ரங்கசாமி தற்போது தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications