Puli Thevar History: ஆங்கிலேயர்களை விரட்டியடித்த முதல் தமிழன்.. பூலித்தேவன் வரலாறு கூறும் AI வீடியோ
சென்னை: பூலித்தேவன்.. The King of நெற்கட்டாங்செவல்.. இந்திய சுதந்திர வரலாறு என்றால் அது இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.. ஒரு கையில் போர் வாள். . இன்னொரு கையில் கேடயம்.. முருக்கு மீசை.. கட்டு மஸ்தான உடல்.. கம்பீரமாக தோற்றம்.. பார்வையாலே எதிரிகளை நடுங்க வைத்த தமிழன்.. வரலாற்றில் அழிக்க முடியாத பெருமைமிகு பாளையக்காரர்.. தமிழகத்தின் தென்காசி மாவட்டம் நெற்கட்டாங்செவலை பாளையமாக கொண்டு ஆட்சி புரிந்த பூலித்தேவன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்டமாட்டேன் என்று முதல் குரல் எழுப்பியவர்.
‛வெள்ளையனே வெளியேறு' என்று முதல் முதலில் வீர முழக்கம் இட்டவர்.. முழக்கத்தோடு மட்டுமின்றி ஆங்கிலேயர்களை ஓடவிட்டு அடித்த தமிழ் அரசன்.. இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படும் சிப்பாய் கலகத்திற்கும் (1857) முன்பாகவே வீரதீரத்துடன் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த தமிழன் தான் இந்த பூலித்தேவன்.. அவரது வீரம் எத்தகையது? ஆங்கிலேயர்களை எப்படியெல்லாம் எதிர்த்தார்? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

இன்றைய தென்காசி மாவட்டத்தின் நெற்கட்டும்செவல் (அப்போது நெற்கட்டாங்செவல்) பாளையக்காரராக இருந்த பூலித்தேவன் செம்மநாட்டு மறவர் குலத்தை சேர்ந்த இந்த மாவீரனின் வரலாற்றை ‛ஒன் இந்தியா தமிழ்' மற்றும் Spark Originals - உடன் இணைந்து AI உதவியுடன் தயாரித்த இந்த வீடியோவில் கண்டு ரசியுங்கள். அசத்தலான இந்த வீடியோவை பார்த்து உங்களின் கமெண்ட்டுகளை தெரிவியுங்கள்.












Click it and Unblock the Notifications