ஸ்வீட் எடு கொண்டாடு.. சர்க்கரை மீது அக்கறை! பட்ஜெட் உரையில் பறந்த பன்னீர்செல்வத்தின் பஞ்ச் டயலாக்குகள்
"இனிப்பை நுகர்வோர்க்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது சர்க்கரை. சர்க்கரைத் தொழிலிலும் அக்கறை காட்ட ஆர்வம் மிகுந்தது தமிழ்நாடு அரசு."
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை கடந்து அதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேற்கோள் காட்டிய தமிழ் இலக்கிய பாடல்களும், பஞ்ச் டயலாக்குகளும் அதிகளவில் கவனத்தை ஈர்த்தன.
"மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே!
"இன்சொல் விளைநிலமா ஈதலே வித்துஆக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்" கிற
என்ற பாடலுடன் தொடங்கிய அவர், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த அரிய வாய்ப்பின் பொருட்டு, இன்று மூன்றாம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்தச் சபையின்முன் வைக்கின்ற மகத்தான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்." என்றார்.

ஔவையார் பாடல்
அடுத்ததாக 'பசி வருகிறபோது அனைத்தையும் மனிதன் இழந்து விடுகிறான்' என்பதைக் குறிப்பிடத்தான் தமிழ் மூதாட்டி ஔவையார்,
'மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்' என்ற ஔவையாரின் பாடலை அடுத்ததாக குறிப்பிட்டார் அமைச்சர்.

இளங்கோவடிகள் பாடல்
'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்'
என்று இளங்கோவடிகள் மழையைப் போற்றிய பாடலை குறிப்பிட்டார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

புறநானூற்று பாடல்
அதேபோல், வேளாண்மைக்கு நீரே உயிர் நீர், புறநானூற்றில் குடபுலவியனார் என்கிற புலவர். 'நீர்நிலைகளை உருவாக்கும் மன்னனே, நீடித்த புகழை அடைய முடியும்.' என்று குறிப்பிடுகிறார். எனக்கூறிய அவர்,
"உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;' என்று புறநானூற்று பாடலையும் கூறினார்.

தென்னை வளர்ச்சி மேம்பாடு
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரை
தலையாலே தான்தருத லால்." என்ற பாடலுடன் தென்னை வளர்ச்சி மேம்பாடு தொடர்பான திட்டத்தை அவர் அறிவித்தார்.

சர்க்கரை அக்கறை
"சர்க்கரை இனிப்பே. இனிய சுவைகளின் மகுடமாகத் திகழ்கிறது. மனம் மகிழும் போதெல்லாம் இனிய அனுபவங்கள் என்றே அழைக்கிறோம். இனிப்பை நுகர்வோர்க்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது சர்க்கரை. சர்க்கரைத் தொழிலிலும் அக்கறை காட்ட ஆர்வம் மிகுந்தது தமிழ்நாடு அரசு. சர்க்கரை ஆலைகளும், கரும்புப் பயிரும். உழவர் பெருமக்களின் சமூக. பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாகி மனிதனின் வருவாய் அதிகரிக்க ஆதாரமாக இருந்து வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.

முக்கூடற் பள்ளு பாடல்
தோட்டப் பயிர் குறித்து பேசிய அமைச்சர் 'முக்கூடற் பள்ளு' பாடலை மேற்கோள் காட்டினார். அதாவது, "முக்கூடற் பள்ளு என்கிற நூலில் வரும்,
மீது யர்ந்திடும் தெங்கிள நீரை
மிடைந்த பூகஞ்
சுமந்துதன் காயைக்
குத மொன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதந் தன்கனி தூங்கும் பலாவில்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்க வேசுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாது எங்கொம்பு வாழையைத் தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே" என்று அவர் குறிப்பிட்டார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications