Group4 தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடம்.. யூடியூப்தான் மூலதனம்.. வெற்றிக்கான ரகசியம் சொல்லும் புனிதா
சென்னை: எந்தவொரு இன்ஸ்டிட்யூட்டுக்கும் சென்று படிக்காமல் யூடியூபை மட்டுமே பார்த்து முழு மூச்சாகப் படித்து குரூப் 4 தேர்வில் சென்னையைச் சேர்ந்த புனிதா ஜோஸ்வின் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக பல்வேறு இன்ஸ்டிட்யூட்களில் படித்து போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், தமிழக அரசின் யூடியூப் சேனலை மட்டுமே பார்த்து முழு மூச்சாகப் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த புனிதா ஜோஸ்வின்.

தனது வெற்றிக்கான காரணம் குறித்து புனிதா ஜோஸ்வின் கூறியதாவது: ஜூலை 12, 2025 இல் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, மாநில அளவில் இரண்டாம் பிடித்துள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் நான் எந்த ஒரு இன்ஸ்டிட்யூட்டுக்கும் சென்று படிக்கவில்லை. தனியாக உட்கார்ந்து வீட்டிலேயே படித்தேன். அரசின் சேனலிலேயே நமக்குத் தேவையான எல்லா தகவல்களும் சிலபஸ் படி கிடைக்கிறது. அதை வைத்து மட்டுமே படித்தேன். தமிழில் 88, ஜிஎஸ் இல் 80 கேள்விகள் போட்டிருக்கிறேன்.
சிலபஸ் படி படித்து வீட்டில் டெஸ்ட் பேட்ஜ் மாதிரி போட்டு, நன்றாக படித்தாலே எல்லோராலும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற முடியும். இன்ஸ்டிட்யூட் சென்று தான் படிக்க வேண்டும், செலவு செய்து தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெஸ்ட் எழுதி பிராக்டிஸ் செய்ய வேண்டும், எல்லா புத்தகத்தையும் படிக்க வேண்டும்.
கடைசி தேர்வில் என்ன தவறு செய்தோமோ அதை அடுத்த தேர்வில் செய்யக் கூடாது. சுய பரிசோதனை செய்து கொள்வது இந்த தேர்வுக்கு மிகவும் அவசியமாகும். எழுதிய எல்லா மாணவர்களும் தேர்வுக்குத் தகுதியானவர்கள் தான். நிறைய பேர் தமிழுக்கு நிறைய நேரத்தை செலவு செய்துவிட்டார்கள். நான் அந்தத் தேர்வில் வித்தியாசமான முறையை கடைப்பிடித்து நேரத்தை மேலாண்மை செய்தேன்.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் விரக்தி அடையக் கூடாது. முதல் தேர்வு மட்டுமே கடினமாக இருக்கும். அடுத்தடுத்த தேர்வுகள் எல்லாமே மிகவும் எளிமையாக இருக்கும். இல்லத்தரசியாக இருக்கும் என்னாலயே வெற்றி பெறும்போது, எல்லோராலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும். முழு நேரமாகப் படிக்கும், வீட்டில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு படிக்கும் எல்லோராலும் வெற்றி பெற முடியும்.
எல்லோர் குடும்பத்திலும் தேர்வு எழுதுபவர்களுக்கு சப்போர்ட் செய்கின்றனர். இவ்வளவு நாள் எழுதிவிட்டீர்கள். இனியும் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். எங்களுடைய இன்ஸ்டிட்யூட்டில் படித்ததாக சொல்லச் சொல்லி நிறைய ஆஃபர்களைக் கொடுக்கிறார்கள். அந்த மாதிரி நான் சொன்னால் நீங்களும் அதனை நம்பிவிடக் கூடாது. அப்படியே ஒரு நிறுவனத்தில் உண்மையாகப் படித்திருந்தாலும் அது உங்களுக்கு செட் ஆகுமா என்று தெரியாது.
அதனால், நம்முடைய வேலை ஒரு புத்தகத்தை கவர் செய்ய வேண்டும். அதற்கான மெட்டீரியல்கள் அனைத்தும் அரசிடமிருந்தே கிடைக்கிறது. நான் சுய பயிற்சியை மட்டுமே மேற்கொண்டேன். தேவையானவற்றை சமூக வலைதளத்தில் தேடி தேடிப் படித்தேன். உங்களாலும் வெற்றி பெற முடியும். அரசிடமிருந்து இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக துச்சமாக நினைக்கக் கூடாது. கிடைப்பதை நாம் பயன்படுத்திக் கொண்டாலே போதும்.
அரசின் எம்டிஎன் சேனலில் உள்ள ஸ்டாப்புகள் எல்லோரும் தேர்வு எழுதிக் கொண்டிருப்பவர்கள் தான். நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள். எனக்கு மிகவும் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கு மட்டும் நாம் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். தமிழில் இப்போது இருக்கும் புத்தகத்தை மட்டும் படிக்காமல், 2005 ஆம் ஆண்டின் புத்தகத்தையும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்பது நல்லது. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமல்லாமல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்தால் வெற்றி பெறலாம் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications