கேஸ் கோர்ட்டில் நடக்கும்போதே.. நீதிபதி முன்பு எசகுபிசகா சிக்கிட்டாரு வக்கீல்.. இந்த அசிங்கம் தேவையா?
சென்னை: நீதிமன்றத்துக்கென சில வழிமுறைகள், நடைமுறைகள் உள்ளன.. இவைகளை பின்பற்றாமல் போனால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்.. இந்நிலையில், பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. உடனே சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நீதிபதியே காட்டமாக எச்சரித்திருக்கிறார்.. என்ன நடந்தது அம்மாநில ஹைகோர்ட்டில்?
பொதுவாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறும்போது, மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. வழக்கு நடைபெறும்போது, போட்டோ எடுப்பது, வீடியோ, மெசேஜ் போன்றவை அனைத்துமே நீதிமன்ற செயல்முறையை பாதிக்கும் என்பதால்தான், போட்டோ அல்லது பதிவு செய்வது Contempt of Court (நீதிமன்ற அவமதிப்பு) குற்றமாகக் கருதப்படுகிறது.

நீதிமன்ற நடைமுறை
அதேபோல கேஸ் நடக்கும்போது செல்போன் பயன்படுத்தப்பட்டால், அந்த தகவல் வெளியில் போவதற்கும் வாய்ப்புள்ளது.. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காகவும், செல்போன்களை அனுமதிப்பதில்லை..
வழக்கை பார்க்க கோர்ட்டுக்கு வருபவர்கள், சாட்சிகள் அல்லது தரப்பினர் செல்போன் பயன்படுத்தினால் உடனடியாக நீதிமன்ற அலுவலர்கள் எச்சரித்து அவர்களை வெளியில் அனுப்பிவிடுவார்கள்.. சிலசமயம் ஒருசில காரணங்களுக்காக பிரத்யேகமாக அனுமதி வழங்கப்படும்.
சமீபகாலமாக ஏஐ எனப்படும் நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.. எனினும் AI என்பது ஒரு உதவி மட்டும்தானே தவிர, மனிதனின் மனதையும் தீர்ப்பையும் அது ஒருபோதும் மாற்றி விடக்கூடாது என்று நீதிபதிகள் பலமுறை எச்சரித்தவாறே உள்ளனர்.
கோர்ட்டில் வீடியோ
சமீபத்தில்கூட, மும்பை ஐகோர்ட்டில் சொத்து தகராறு தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது... ஏ.எஸ். கட்கரி, கமல்கட்டா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, நவி மும்பையை சேர்ந்த சஜத் அப்துல் ஜப்பார் படேல் என்பவர், கோர்ட் நடவடிக்கைகளை உள்ளேயே இருந்து கொண்டு தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.. இதை கோர்ட் ஊழியர் ஒருவர் பார்த்துவிட்டு, வீடியோ எடுக்கும் நபர் யார் என்று விசாரித்துள்ளார். அப்போதுதான் அந்நபர் மனுதாரரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது..
ஏஐ செல்போன்
உடனே இந்த விஷயம் நீதிபதிகள் வரை சென்றது.. வீடியோ எடுத்த நபர் பற்றி மனுதாரர் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, கோர்ட் நடவடிக்கைகளை மொபைல்போனில் ரிக்கார்ட் செய்ய அவருக்கு அனுமதி தரப்படவில்லை என்பது உறுதியானது.. உடனே நடத்தை விதிகளை மீறியதாக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை நீதிபதிகள் விதித்தனர். இந்த தொகையை கோர்ட் ஊழியர்களின் மருத்துவ நிதிக்காக அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
செல்போன் பறிமுதல் - ஏஐ
இப்படிப்பட்ட சூழலில், பஞ்சாப் மற்றும் அரியானா ஹைகோர்ட்டில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அங்கு ஒரு வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது.. அப்போது, வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து, கேள்வி ஒன்றுக்கு கூகுளை நாடினார்..
பிறகு, ஏஐ மூலமும் தனக்கான பதிலை அவசர அவசரமாக தேடினார். இறுதியில் ஏஐ மூலம் தனக்கான பதில் கிடைத்ததுமே, அதை கோர்டில் சொல்ல முயன்றுள்ளார்..
ஆனால், இதையெல்லாம் நீதிபதி சஞ்சய் வசிஷ்த் கவனித்து கொண்டேயிருந்தார்.. இறுதியில், அந்த வழக்கறிஞரின் செல்போனை பறிமுதல் செய்து அதிரடி உத்தரவிட்டார்.
அதையே நம்பியிருக்க கூடாது
தொடர்ந்து நீதிபதி தன்னுடைய உத்தரவில், "வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும். இதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.
வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முன்பாகவே, தங்களது வழக்குகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்து தயாராக வர வேண்டும்... தங்களது வாதத்தின்போது செல்போன்களையே நம்பியிருக்கக் கூடாது. ஐபேடுகள் மற்றும் லேப்டாப் போன்றவை தொழில்முறை கருவிகளாக கருதப்படுகின்றன என்றாலும், செல்போன்கள் வாதத்தின்போது பயன்படுத்த ஏற்ற கருவிகள் கிடையாது" என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.












Click it and Unblock the Notifications