பஞ்சாப் எல்லாமே பக்கா.. மதுபான ஊழல் செய்ய முடியாது.. டாஸ்மாக் மட்டும் சர்ச்சையில் மாட்டுவது ஏன்?
சென்னை: பஞ்சாப் மாநிலத்தின் மதுக்கடைக் கொள்கை இந்தியாவில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணம், வெளிப்படைத்தன்மை, முறையான கண்காணிப்பு, மற்றும் பொதுமக்கள் நலனுக்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது. இதைத் தமிழ்நாட்டின் TASMAC அமைப்புடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

- ஈ-டெண்டரிங் முறையில் உரிமம்: மதுக்கடைகளுக்கான உரிமங்கள் முழுமையாக e-tendering முறையில் வழங்கப்படுகின்றன. இது முறைகேடு, ஊழல், அரசியல் தலையீடு ஆகியவற்றை குறைக்கிறது.
- விலை கண்காணிப்பு மற்றும் புகார் செல்கள்: மதுபானங்கள் MRP-ஐ விட அதிகமாக விற்கப்படுமானால், பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கக்கூடிய ஹெல்ப்லைன் (18002582580) மற்றும் விலை கண்காணிப்பு குழு உள்ளது. முறையை மீறும் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கைகள் உள்ளன.
- ஆட்சி மற்றும் வருமானம்: வெளிப்படையான வருமானம், வரி வசூல், மற்றும் சமூக நலனுக்கான செலவீனங்கள் (உதா: பசு நலனுக்கான cess) அரசு கண்காணிப்பில் செலவிடப்படுகிறது.
- சிறப்பு காவல் நிலையங்கள்: மதுக்கடைகளில் சட்டவிரோத விற்பனை, கடைசியில் விலை மீறல், போலி மதுபானம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் தனிப்பட்ட excise police stations அமைக்கப்பட்டுள்ளன.
- முழுமையான அரசு ஒற்றைமுகம்: தமிழ்நாட்டில் TASMAC மட்டுமே மதுபான விற்பனையை நடத்துகிறது. போட்டி இல்லாததால் முறைகேடு அதிகம்.
- ஊழல் மற்றும் டெண்டர் முறைகேடு: ரூ.1000 கோடி ஊழல், டெண்டர் முறைகேடு, போலி பில்லிங், அரசியல் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்றவை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுவதற்கு பஞ்சாப் போல வெளிப்படைத்தன்மை இல்லாதது காரணம்.
- MRP மீறல்: TASMAC கடைகளில் MRP-ஐ விட அதிகமாக வசூல் செய்வது வழக்கம். புகார் செய்தாலும், முழுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில் குறைபாடு உள்ளது. வீட்டுக்கு சப்ளை செய்யப்படும் கேஸ் சிலிண்டருக்கு கூடுதலாக 50 ரூபாய் வரை, பணத்தை சப்ளையர் வாங்குவதில்லையா அதுபோலத்தான் இதுவும், இது ஊழல் இல்லை என்பது திமுகவினர் வாதமாக உள்ளது.
- பில் வழங்காதல், கண்காணிப்பு குறைவு: வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்கப்படுவதில் சீர்கேடு, POS மெஷின் பயன்பாடு குறைவு, வருமான கண்காணிப்பு குறைவு டாஸ்மாக்கின் சாபக்கேடாக உள்ளன.
- சிறப்பு புகார் செல்கள், கண்காணிப்பு இல்லாமை: புகார் செல்கள் இருந்தாலும், நடைமுறை நடவடிக்கை குறைவு. ஊழல் புகார்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டவிரோத ஒப்பந்தங்கள்: சில பிரபலமான ஹோட்டல்கள் உரிய உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்வது, பார்கள் நடத்துவது, உரிமம் புதுப்பிப்பில் தாமதம், அதிகாரிகள் இடையீடு போன்றவை தொடர்கின்றன என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது. அதிமுக ஆட்சி கால நடைமுறைதான் தொடர்கிறது என்று மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் ஏன் அதை சீரமைக்கவில்லை என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஒப்பீட்டு அட்டவணை
| அம்சம் | பஞ்சாப் மதுக்கடைக் கொள்கை | TASMAC (தமிழ்நாடு) |
| உரிமம் வழங்கல் | ஈ-டெண்டரிங், வெளிப்படைத்தன்மை | போட்டி இல்லை |
| விலை கண்காணிப்பு | ஹெல்ப்லைன், விலை கண்காணிப்பு குழு, அபராதம் | MRP மீறல் வழக்கம், புகார் நடவடிக்கை குறைவு |
| ஊழல் தடுப்பு | தனி excise காவல் நிலையம், கடுமையான நடவடிக்கை | ரூ.1000 கோடி ஊழல், அரசியல் தலையீடு |
| வருமான வெளிப்படைத்தன்மை | அனைத்து விவரங்களும் அரசு வெளியிடும் | கண்காணிப்பு குறைவு, பில் வழங்காதது |
| சமூக நலன் | பசு நலனுக்கான cess, சமூக திட்டங்கள் | சமூக நலனில் நேரடி செலவீனத் தகவல் இல்லை |
பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை
- மதுபானம் வாங்கும் போது MRP-ஐ சரிபார்க்கவும். அதிகமாக வசூலித்தால் புகார் செய்யவும்.
- அரசு அறிவித்துள்ள உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்கவும்.
- போலி மதுபானம், சட்டவிரோத விற்பனை குறித்து போலீசில் தகவல் வழங்கவும்.
- TASMAC-இல் பில்/ரசீது வாங்குவது அவசியம்.
- ஊழல், முறைகேடு குறித்து ஊடகம், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.
பஞ்சாப் மதுக்கடைக் கொள்கை வெளிப்படைத்தன்மை, போட்டி, கண்காணிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஊழல், விலை மீறல், சட்டவிரோத விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இதே நேரத்தில், TASMAC அமைப்பில் வெளிப்படைத்தன்மை குறைவு, MRP மீறல், அரசியல் தலையீடு போன்றவை தொடர்கின்றன, இது பொதுமக்கள் நலனுக்கும், அரசின் நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பஞ்சாப் மாதிரியாக உற்பத்தியானது முதல் கடைசியாக ஒருவர் கையில் சேருவது வரை எங்கே பாட்டில்கள் போகின்றன என்பதை அறியும், வெளிப்படைத்தன்மை, முறையான கண்காணிப்பு, போட்டி ஆகியவை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அல்லது ஒவ்வொரு அரசும் ஊழல் புகாரை தலையில் தூக்கிக்கொண்டு திரிவதை தவிர வேறு வழியில்லை. ஊழலை குறைத்தால் அந்த பணத்தை வேறு மக்கள் நலப் பணிகளுக்கு செலவிட வாய்ப்பு உருவாகுமல்லவா.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications