Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 1 சீட்.. எந்த தொகுதி? உறுதியாக சொன்ன பூவை ஜெகன்மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி உடன்பாடு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு பேச்சுகளும் அதிமுக சார்பில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Puratchi Bharatham going to contest in one seat in the upcoming Lok Sabha election

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி அறிவித்தார்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வர உள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 40க்கு 40 நாங்கள் தான் என நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு தூக்கத்தை கெடுத்திருக்கிறது.” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி சென்னையில் இன்று செந்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி நிச்சயம் தொடர்கிறது. இந்த தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி வெற்றி பெற அனைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபடுவோம்.

அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இது தொடர்பாக அதிமுகவிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய பூவை ஜெகன்மூர்த்தி, “தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வராது என்பது பிரதமர் மோடிக்குத் தெரியும்.

பாஜக மீது தமிழக மக்களிடையே வெறுப்பு உள்ளது. வெறும் 3 சதவீதம் வாக்கு சதத்தை வைத்துள்ள பாஜக, தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாகவா இருக்கிறது? அதுபோல திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆனால், அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

பாமர மக்களிடையே அதிமுக என்றால் எம்.ஜி.ஆர் கட்சி, ஜெயலலிதா கட்சி, இரட்டை இலை என்று தெளிவாகப் பதிந்துள்ளது. கட்சியை எடப்பாடி பழனிசாமி சீராக நடத்தி வருகிறார். அதனால், அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வைப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+