பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் கொள்முதல்.. விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்புகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.விவசாயிகள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் (சென்னை தவிர) மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குனர், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களை தலைவராக கொண்டு உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளரை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னனுபரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட வாரியாக இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தாங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications