Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ சொல்றியா மாமா.. பத்மினி வாயசைக்க.. சிவாஜி நாதஸ்வரம் வாசிக்க.. புஷ்பா.. அடேங்கப்பா இது வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தில்லானா மோகனாம்பாள் படத்தில் வந்த நலம்தானா பாடலை புஷ்பாவின் ஓ சொல்றியா மாமா வெர்ஷனுடன் இணைத்து செம காமெடியாக வைரலாகி வருகிறது.

Recommended Video

    Pushpa Movie Review in Tamil by Poster Pakiri | Allu Arjun| Fahadh Faasil| Rashmika| Filmibeat Tamil

    தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சாமி என் சாமி பாடலும் ஓ சொல்றியா மாமா பாடலும் வைரலாகின.

    இதில் சாமி என் சாமி பாடலுக்கு அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மண்டனாவும் நடித்திருந்தார்கள். அது போல் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா முதல்முறையாக ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

     தியேட்டரில் அப்லாஸ்

    தியேட்டரில் அப்லாஸ்

    இதனால் சாமி என் சாமி பாடலை விட தியேட்டரில் ஓ சொல்றியா மாமாதான் அப்லாஸை அள்ளுகிறது. அந்த அளவுக்கு சமந்தா கவர்ச்சியை காட்டியிருக்கிறார். இந்த பாடலை வேறு ஒரு வெர்ஷனில் இருந்தால் எப்படியிருக்கும் என நெட்டிசன்கள் டிரை செய்துள்ளார்கள். அதில் தில்லானா மோகனாம்பாள் பாடலை எடுத்துள்ளார்கள்.

     தில்லானா மோகனாம்பாள்

    தில்லானா மோகனாம்பாள்

    அந்த படத்தில் கையில் அடிப்பட்டு கட்டுடன் நாகஸ்வரம் வாசிப்பார் சிவாஜி கணேசன். அவருடன் நேரடியாக பேச பத்மினியின் தாய் தடை விதிப்பார். இதனால் பாட்டாலேயே சிவாஜியின் உடல்நிலையை கேட்டறிவார். அந்த பாடல் நலம்தானா நலம்தானா.. உடலும் உள்ளமும் நலம்தானா.. என இருக்கும்.

     சிவாஜி

    சிவாஜி

    இதில் பத்மினி, சிவாஜியிடம் பாடும் போது ஓ சொல்றியா மாமா ஊ சொல்றியா மாமா என தொடங்க அதற்கு சிவாஜி நாகஸ்வரம் வாசிப்பதை அந்த ஐட்டம் பாடலின் மியூசிக்குடன் இணைத்து பாலையாவின் மேளத்தாளத்துடன் செம காமெடியாக இருக்கிறது. தற்போது இந்த கலப்படம் செய்யப்பட்ட ரீமிக்ஸ் பாடலின் 15 நொடிகள் வருவது வைரலாகி வருகிறது.

    சிரிப்பு

    சிரிப்பு

    நலம்தானா பாடலுக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. பார்ப்பதற்கு சிரிப்பை வரவழைக்கிறது. நன்றாக இரு பாடல்களும் சிங்க் ஆவதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். என்ன இருந்தாலும் பாரம்பரிய பாடலானா, அனைவராலும் போற்றப்பட்ட , எவர்கிரீன் பாடலை ஒரு ஐட்டம் சாங்குடன் சிங்க் செய்திருப்பது பழைய சினிமா ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+