"ஊ சொல்றியா மாமா".. ஆண்களை பாலியல் ரீதியாக விமர்சிக்கிறதா புஷ்பா பாடல்.. உண்மை அர்த்தம் என்ன?
சென்னை: புஷ்பா படத்தில் இடம்பெற்று இருக்கும் ஊ சொல்றியா மாமா பாடல் இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே ஏய் சாமி பாடல் ஹிட் ஆன நிலையில் ஊ சொல்றியா மாமா பாடல் வெளியாகி இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சமந்தா டான்ஸ் ஆடும் இந்த படம் அந்த படத்தின் ஐட்டம் சங்காக வெளியாக உள்ளது. தற்போது லிரிக்ஸ் வீடியோ மட்டுமே வெளியே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில், ஆண்ட்ரியாவின் வசீகரமான குரலில் பாடல் பலரையும் கவர்ந்து உள்ளது.
முக்கியமாக ஆண்ட்ரியாவின் வசீகரமான குரல் காரணமாக பாடல் பலரை கவர்ந்து உள்ளது. இந்த பாடல் தமிழில் பாடலாசிரியர் விவேகா மூலம் எழுதப்பட்டுள்ளது.

விவாதம்
இந்த நிலையில் பாடலில் இருக்கும் வரிகள் ஆண்களை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பாலியல் ரீதியாக ஆண்கள் எப்போதும் நாட்டம் கொண்டவர்கள். பெண்களை அனைத்து ஆண்களும் எப்போதும் போக பொருளாக பார்க்க கூடியவர்கள் என்ற பாணியில் பாடல் வரிகள் சித்தரிப்பதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

வரிகள்
முக்கியமாக இந்த பாடலில், சேலை, ப்ளவுஸ், சின்ன கவுன் டிரெஸ்ஸில் ஒன்னும் இல்லைங்க, ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையும் அலையும் ஆம்பளை புத்தி என்ற வரிகளும், ஒழுக்க சீலன, ஒசந்த மனுஷன் வெளிய போடும் வேஷம்ங்க, விளக்கை அணைச்சா போதும் எல்லாம் வெளக்கை மாறும் ஒண்ணுதாங்க என்று ஆண்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

கருத்து 1
இந்த பாடல் வரிகள் குறித்து ஒரு சாரர் தெரிவிக்கும் கருத்தில், ஆண்களின் உண்மை முகத்தை இது காட்டுகிறது. பலருக்கு பாலியல் ரீதியான விருப்பம் அதிகம் உள்ளது. பெண்கள் சொல்வதற்கு எல்லாம் ஊ சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள். இதைத்தான் பாடல் வரிகள் சொல்கிறது. இதில் தவறு எதுவும் இல்லை என்று ஒரு சாரர் தெரிவிக்கிறார்கள்.

கருத்து 2
இன்னொரு சாரர் தெரிவிக்கும் கருத்தில் இது ஆண்களை தவறாக சித்தரிக்கிறது. ஆண்களை பாலியல் ரீதியாக குற்றஞ்சாட்டுகிறது. எல்லா ஆண்களும் தவறானவர்கள். பெண் மோகம் அதிகம் கொண்டவர்கள் என்பது போல ஆண்களை இது சித்தரிக்கிறது என்று பாடல் வரிகள் குறித்து இன்னொரு சாரர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்து 3
இன்னொரு பக்கம் தமிழில் பல பாடல்கள் ஆண்களை ஆதரித்தும், பெண்களை அடிடா அவளை என்றும் கூறி வந்து இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த பாடலில் என்ன தவறு இருக்கிறது என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இந்த பாடல் ஆண்களை நேரடியாக தவறாக பேசவில்லை. இந்த பாடல் கிராமத்தில் இருக்கும் சொலவடைகளை பற்றி மட்டுமே பேசுகிறது. கிராமத்தில் ஆம்பள புத்தி என்று கூறுவது வழக்கம்.

உண்மை என்ன?
அதை பற்றித்தான் இப்போது பாடலிலும் சொல்லி இருக்கிறார் விவேகா, இதில் தவறு எதுவும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதே பாடலின் தெலுங்கு வரிகளுக்கு எதிராக ஆந்திர பிரதேசத்தில் போராட்டங்கள் நடப்பதும், வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அந்த அளவிற்கு பிரச்சனை வரவில்லை என்றாலும் விமர்சனம் அதிக அளவில் வைக்கப்பட்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications