முதல்வர் விஜய்யை சந்தித்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புஷ்பவனம் குப்புசாமி, பின்னணி பாடகர், பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார். "எதிரும் புதிரும்" படத்தில் இடம் பெற்ற "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா", பேரழகன் படத்தில் "காதலுக்கு பள்ளிக் கூடம்", திருப்பாச்சி படத்தல் "அப்பன் பண்ண", இட்லி கடை படத்தில் இடம்பெற்ற "எத்தன சாமி" உள்ளிட்ட பல சினிமா பாடல்களை பாடியுள்ளார்.

Pushpavanam Kuppusamy

நாட்டுப்புற பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை மக்களிடம் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் குப்புசாமி. இந்த நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்பது தமிழக பாரம்பரிய கலைகள், நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து வளர்ப்பதுடன் கலைஞர்களை ஊக்குவிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள், அரசு சார்ந்த அங்கீகாரங்களை வழங்குவது, கலை சார்ந்த படைப்புகளை வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை இந்த மன்றம் செய்து வருகிறது. கலைமாமணி விருதுகளுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்வதும் முக்கிய பொறுப்பாகும்.

நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகை, அவர்களது குடும்பத்தினருக்கான நிவாரணத் திட்டங்களை முறையாக பயனாளிகளுக்கு பெற்றுத் தருவது அழியும் விளிம்பில் உள்ள நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கும் பணிகளையும் இந்த மன்றம் செய்யும்.

இந்த மன்றத்தின் தலைவராக இதுவரை வாகை சந்திரசேகர் செயல்பட்டு வந்தார். தற்போது அந்த பொறுப்பு புஷ்பவனம் குப்புசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ நியமன ஆணை வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக் கல்வி , தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து புஷ்பவனம் குப்புசாமி வாழ்த்து பெற்றார். அது போல் முதல்வர் விஜய்யை தனது மனைவி மகள் ஆகியோருடன் சந்தித்த புஷ்பவனம் குப்புசாமி அவரிடமும் வாழ்த்து பெற்றார்.

புஷ்பவனம் குப்புசாமிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு வாழ்த்து. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி அனிதா குப்புசாமியும் கிராமிய பாடல்களை பாடுபவர்தான். இருவரும் இணைந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+