புஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா?.. "இல்லை" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்!
அனிதா குப்புசாமி மகள் மாயமானதாகி உள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: "செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. டாக்டர் பல்லவியை காணவில்லை.. காரை எடுத்து கொண்டு போனார்.. எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. கண்டுபிடித்து தர வேண்டும்" என்று புஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமானதாக ஒரு புகார் போலீஸில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது போலியான செய்தி. நான் எங்கும் போகவில்லை என்று பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது.
பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. மூத்த மகள் பல்லவி.. டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் டாக்டர் பல்லவியை காணவில்லை என்று புகார் ஒன்றினை தந்துள்ளார்.

தகராறு
அந்த புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்துடன் காரை எடுத்து கொண்டு சென்றுள்ளார் பல்லவி.. ஆனால், நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

ஸ்விட்ச் ஆப்
பல்லவியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அதனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் "Guys some random fake news is spreading that I've been kidnapped or lost or something... I'm absolutely fine.. Do NOT believe such fake stuff!" என்று அதில் இடம் பெற்றுள்ளது.

நம்ப வேண்டாம்
அதாவது, "நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் காரணமாக, பல்லவி காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

உண்மை என்ன?
இதுவரை புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் சொல்வதே உண்மையாக இருக்க முடியும் என்பதால் மக்கள் அவர்களின் விளக்கத்துக்காக காத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications