அடிமைகள்! அண்ணா பெயரை தூக்கிட்டு அமித்ஷா, அண்ணாமலை பேர போடுங்க -அதிமுகவை சாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாவின் பெயரை தூக்கிவிட்டு அமித்ஷாவின் பெயரையோ அல்லது அண்ணாமலையின் பெயரையோ சேர்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும் என அதிமுகவை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவிக்கு எதிர்விணை

ஆளுநர் ரவிக்கு எதிர்விணை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் தன்னிச்சையாக கூட்டியிருக்கிறார்.

ஏன் மோதல்?

ஏன் மோதல்?

நீட், ஏழு தமிழர் விடுதலை உட்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறார். இதற்காக திமுக தரப்பில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தையும் அரசு புறக்கணித்தது.

 ஒரு மனதாக தீர்மானம்

ஒரு மனதாக தீர்மானம்

அண்மையில் மயிலாடுதுறை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக வெளிநடப்பு

அதிமுக, பாஜக வெளிநடப்பு

இந்த மசோதாவுக்கு அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து 4 பாஜக எம்.எல்.ஏக்களும் அங்கிருந்து வெளியேறினர்

அண்ணா பெயரை மாற்றுங்கள்

அண்ணா பெயரை மாற்றுங்கள்

இந்த நிலையில் தமிழ்நாடு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார். "மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்து இருப்பது இன்னும் நாங்கள் சுயமாக யோசிக்கும் அறிவை பெறவில்லை என சொல்வது போல் உள்ளது.சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளுக்கு அர்த்தமே தெரியாமல் அடிமையாய் வாழ்ந்து பழகியவர்கள் அண்ணாவின் பெயரை தூக்கிவிட்டு அமித்ஷாவின் பெயரையோ அல்லது அண்ணாமலையின் பெயரையோ சேர்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பாஜகவிற்கு அடிமை

பாஜகவிற்கு அடிமை

அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்து கொண்டிருக்கும் அஇஅதிமுக-வினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை! மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு அடிமையாக இருக்கும் வழக்கம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+