சட்டசபையில் கண் கலங்கிய அமைச்சர் எ.வ.வேலு! பாராட்டு மழையில் நனைந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசும் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார்.
காலம் உள்ளவரை அவருக்கு நன்றி மறக்காமல் இருப்பேன் என உணர்ச்சிவசப்பட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டு மழையில் நனைத்தார்.
மேலும், நகராட்சிகளில் 59 பைபாஸ் சாலைகள், சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உயர்மட்டப் பாலம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மானியக்கோரிக்கை
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இந்த துறைகள் அனைத்துக்கும் எ.வ.வேலு தான் அமைச்சர் என்பதால், காலை முதலே அவர் தான் சட்டப்பேரவையில் நடுநாயகமாக தொடர்ந்து பேசி வந்தார். அதோடு முக்கிய அறிவிப்புகள் பலவற்றையும் வெளியிட்டார்.

கண் கலங்கினார்
மதிய உணவுக்கு பிறகு நெடுஞ்சாலைத் துறை தொடர்பான அறிவிப்புகளை வாசிப்பதற்கு முன்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி குறிப்பிட்டு பேசும் போது தன்னையறியாமல் கண்கள் கலங்கினார். தழுதழுத்த குரலில் அவர் பேசியதை முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கவனித்தனர். மேலும், தொடர்ந்து பேசிய அவர் தனது பாராட்டு மழையில் முதலமைச்சர் ஸ்டாலினை நனைய வைத்தார்.

நேரம் ஆனது
எ.வ.வேலு நேரத்தை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். மூத்த அமைச்சர் மற்றும் முக்கியத் துறைகள் மீதான மானியக்கோரிக்கை என்பதால் சபாநாயகர் அப்பாவுவும் வேறு வழியின்றி அமைதிகாத்தார். இடை இடையே தண்ணீர் அருந்திய அவர், ''தண்ணீர் எடுத்து கொடு உனக்கு எத்தனை தடவை தண்ணீர் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்'' என தனது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஓபன் மைக்கிலேயே கலாய்த்தார்.

சிரிப்பலை
அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சுமொழியும் அவரது பேச்சில் இருந்த நகைச்சுவை நயமும் பேரவையில் இருந்த முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் சிரிக்க வைத்தது. நகராட்சிகளில் பைபாஸ் சாலைகள், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்டப்பாலம், ஊட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்க ரூ.70 கோடி, பொதுப்பணித்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்டவைகள் அவரது அறிபிப்புகளில் முக்கியமானதாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications