குரூப் 4 மாதிரியே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் கேள்வி.. இதுக்கு பதிலை கண்டுபிடிங்க பார்ப்போம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 90 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர். இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட சுவாரசியமான கேள்வி ஒன்றை பற்றி இங்கே பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

குரூப் 1 தேர்வு: இந்த நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 2.30 எழுத விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 200 கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில் கேட்கப்பட்ட சில கேள்விகள் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்டது போல மிக நுணுக்கமாக தேர்வர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக இருந்தது. தேர்வர்கள் மத்தியில் இந்த கேள்வி அதிகம் பரவி வருகிறது. குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வியின் விவரம் வருமாறு:-
விடை என்ன?: ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர். கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளார். மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளார். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளார்?
(A) 9
(B) 10
(C) 11
(D) 13
(E) விடை தெரியவில்லை. என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இதற்கான விடை என்ன என்றும், விடை எப்படி வந்தது? என்றும் கண்டுபிடியுங்கள். விடையை கமெண்டில் சொல்லுங்கள்.
குரூப் 4 கேள்வி: கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்விலும் தேர்வர்களை மூளையை கசக்கி பிழிய வைக்கும் வகையில் மிகவும் நுணுக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது.. அதாவது, ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும்.
30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது 'அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்? என்று கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் விடை ஜீரோ என்று சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். ஆனால், ஓட்டுனர் புத்திசாலியான நபர் என்பதால் முதலில் உள்ள 10 செக் போஸ்டில் மூட்டைக்கு ஒன்று என்று 3 மூட்டைக்கு மாம்பழம் கொடுத்தால். 10 செக் போஸ்ட் முடிய 30 மாம்பழங்கள் காலி ஆகும்.
எத்தனை மாம்பழம் இருக்கும்?: மீதம் மூட்டைக்கு 20 மாம்பழங்கள் இருக்கும். 3 மூட்டைக்கு தலா 20 மாம்பழங்கள் என்று 60 மாம்பழம் இருக்கும். இதை இரண்டு மூட்டையாக பிரித்து ஒரு மூட்டைக்கு 30 என்று டிரைவர் மாற்றி வைக்கலாம். அதன்பின் அடுத்த 15 செக் போஸ்டில் இரண்டு மூட்டையில் இருந்து தலா 1 மாம்பழம் கொடுத்தால், ஒரு மூட்டைக்கு 15 மாம்பழம் என்று 2 மூட்டைக்கு 30 மாம்பழம் போக மீதம் 30 மாம்பழம் இருக்கும். அதை ஒரு மூட்டையில் போட்டு அடுத்த 5 செக் போஸ்ட்டில் 5 மாம்பழங்கள் கொடுத்தால் மீதம் 25 மாம்பழம் இருக்கும். இதுவே அதற்கான விடையாகும்.
-
IT Jobs: மார்ச் 14ல் இண்டர்வியூ.. எச்சிஎல் முக்கிய அறிவிப்பு.. சூப்பர் வேலை -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. அழைக்கும் HCL.. மார்ச் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications