திரிஷா எப்போது துணை முதல்வராகிறார்? அதிர்ச்சியுடன் காத்திருக்கும் அன்னைத் தமிழகம்! ஆர்.பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தயாரிப்பாளர்கள் வெங்கட நாராயண ரெட்டி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோருக்கு முதல்வர் விஜய் அரசு பதவிகளை கொடுத்துள்ள நிலையில், நடிகை திரிஷாவை எப்போது துணை முதல்வராக்க போகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் அண்மையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , காவிரி தண்ணீருக்காக போராடாமல் எங்கள் அண்ணி திரிஷாவுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போராட்டம் நடத்தின என விமர்சித்திருந்தார்.

rb udhayakumar

மேலும் அவர் பேசுகையில் சட்டசபைக்கு வந்து முதல்வர் விஜய் கலகலப்பாக இருக்க வேண்டாமா என கேட்ட ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் அங்கும் இங்கும் சட்டசபையில் பார்ப்பதை போன்று கிண்டல் செய்தார். உடனே கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் மேலும் தொடர்கையில், எத்தனை ஆண்டு காலம் அதிமுக மக்களுக்காக சேவை செய்து உழைத்து இருந்தாலும் எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பை மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சந்தோஷமாக இருக்க வேண்டாமா, எதையோ பறிகொடுத்ததை போல் உட்கார்ந்து இருக்கிறார் என விமர்சித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் எல்லாம் நடிகையின் பெயரை சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சிரித்துக் கொண்டே, "எங்கள் அண்ணனுக்கு தெரிந்தது எல்லாம் அந்த நடிகை மட்டும்தான்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த பேச்சுக்கு திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த போஸ்டரில், எங்கள் அக்கா திரிஷா குறித்து யார் தவறாக பேசினாலும் ஏற்க முடியாது.

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் திரிஷா குறித்து விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோருக்கு முதல்வர் விஜய் பதவி வழங்கியுள்ளாரே நடிகை திரிஷாவை துணை முதல்வராக்கப் போவது எப்போது? தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கை முழக்கம் செய்துள்ளது. எல்லோருமே நம்பினோம்.

ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களின் நிலவரமோ கலவரமாக உருவாகியுள்ளது. நம்ம முதல்வர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட் கலைஞர்கள் அரசு பொறுப்பில் சப்தமில்லாமல் சைலண்டாக நியமித்திருக்கிறார்கள்.

தற்போது கோயில் அறங்காவலர் நியமனக் குழுவில் கோட் பட தயாரிப்பாளர், கேரளாவை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நம்ம முதல்வர் விஜய் நடித்த ஜனயநாகன் பட தயாரிப்பாளர் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நம்ம முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் உள்ளிட்டோர் அரசின் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அது போல் திரிஷா அண்ணி எப்போது தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற அதிர்ச்சியுடன் தமிழகமே காத்திருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+