R.N.Ravi: தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் சர்ச்சைகள்! 2021 - 2026 வரை நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை சுற்றி எழுந்த பல்வேறு சர்ச்சைகள் குறித்து பார்க்கலாம். ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார்.

அவர் பதவியேற்றது முதல் சட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தார். அரசு நிர்வாகத்தில் தலையிட்டார், ஆளுநர் உரையில் அரசு தயாரித்த பகுதிகளை தவிர்த்தார். அண்மையில் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தீர்ப்புகள் வரை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார்.

rn ravi tamil nadu

2021 ஆம் ஆண்டு: தமிழகத்தின் 15ஆம் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். அப்போது தமிழக தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பை அழைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை கேட்டார். இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டதாகும். இதற்கு திமுக, அதன் கூட்டணி கட்சியினர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

2022 ஆம் ஆண்டு: அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தமிழக சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ரவி, அதை சபாநாயருக்கு திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதா, கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்றார்.

2023 ஆம் ஆண்டு: ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியது. ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரியான சொல் என கூறியது தமிழகத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியது.

ஜூன் மாதம்: அமலாக்கத் துறை வழக்கில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். பின்னர் அந்த உத்தரவை திரும்ப பெற்றார்.

அக்டோபர் மாதம்: ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

2025 ஏப்ரல்: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்புகளை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. ஏப்ரல் 8ஆம் தேதி ஆளுநரின் தாமதமான நடவடிக்கையால் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை உச்சநீதிமன்றம் அரசியலமைப்பிற்கு முரணானது என கண்டித்தது.

ஏப்ரல் 13 ஆம் தேதி ஒரு விழாவில் மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச் சொன்னதார ஆளுநர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநர், தமிழக சட்டசபையில் உரையை புறக்கணித்த நிகழ்வுகளை பார்க்கலாம்.

2022 ஆம் ஆண்டு மட்டும் சட்டசபையில் முதல் உரையை ஆளுநர் ரவி முழுமையாக படித்தார்.

2023 ஆம் ஆண்டு சட்டசபைில் வாசிப்பதற்காக தயாரித்த உரையில் மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிப்பதை தவிர்த்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.

2024 ஆம் ஆண்டு சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி உரையை வாசிக்காமல் இருந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார். இதையடுத்து ஆளுநர் ரவி வெளிநடப்புச் செய்தார்.

2025 ஆம் ஆண்டும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி அவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.

2026 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் கூட்டத் தொடரின் போதும் உரையை வாசிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பலமுறை கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் தமிழக ஆளுநராக இருந்த ரவி, தற்போது மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+