ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற ஓபிஎஸ்: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு நிலத்தை தனது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் 10.5 ஏக்கர் அரசு நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு வாரம் முன்னர் கோயம்பேட்டில் உள்ள தனியார் துறை நிறுவனத்துக்கு அரசு நிலம் 10.5 ஏக்கரை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.

ஓபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார் மீது குற்றச்சாட்டு

ஓபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார் மீது குற்றச்சாட்டு

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில் அரசின் நிலத்தை விதிமுறைகளை மீறி அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலத்தை ஓபிஎஸ் மகன்கள் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு விற்றதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

அரசு விதி மீறல், கட்டுமானத்துக்காகவும் அனுமதி

அரசு விதி மீறல், கட்டுமானத்துக்காகவும் அனுமதி

இதுதவிர நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியையும் உடனடியாக வழங்கியதாக அவரது புகாரில் கூறியிருந்தார். ஏற்கெனவே ஆட்சி மாறிய நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான முறைகேடு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டு எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டும் நடந்தது.

ஓபிஎஸ் மீது குவியும் ரூ.1000 கோடி புகார்

ஓபிஎஸ் மீது குவியும் ரூ.1000 கோடி புகார்

ஓபிஎஸ் அமைச்சராக இருந்த வீட்டுவசதித்துறையின் கீழ் வரும் கே.பி.பார்க் கட்டுமானம் மோசமாக இருந்ததை ஒட்டி அதன் கட்டுமான நிறுவனம் அதை மராமத்து பார்த்து தரும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனியில் கிராவல் மண் எடுப்பதில் அரசு அனுமதியின்றி முறைகேடாக எடுத்ததில் ரூ.500 கோடி இழப்பு என சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதுகுறித்து கண்காணிப்பு ஆணைய விசாரணையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆவணங்களை ஒப்படைத்த ஆர்.எஸ்.பாரதி

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆவணங்களை ஒப்படைத்த ஆர்.எஸ்.பாரதி

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி புகாரின்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆர்.எஸ்.பாரதி அழைக்கப்பட்டிருந்தார். இன்று விசாரணைக்கு ஆஜரான ஆர்.எஸ்.பாரதி தனது புகார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒப்படைத்து விளக்கமளித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிள்ளைகள் பங்குதாரராக உள்ள நிறுவனம் ஓபிஎஸ்சுக்கு வாங்கிக் கொடுத்த கார்

பிள்ளைகள் பங்குதாரராக உள்ள நிறுவனம் ஓபிஎஸ்சுக்கு வாங்கிக் கொடுத்த கார்

அப்போது அவர் கூறியதாவது; "ஓபிஎஸ் மூன்று பிள்ளைகளும் ஒரு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளனர். ஓபிஎஸ் பயன்படுத்தும் கார், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் பெயரில் தான் வாங்கியுள்ளனர். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் விற்பனை

தனியார் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் விற்பனை

அரசு இடத்தை அவரது மகன் பார்டனராக உள்ள அல்லது அந்த தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் நிறுவனத்துக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது. இதனால் அரசுக்கு ஏறத்தாழ ரூ. 500 கோடி இழப்பு. அரசுக்கு நிலம் பயன்படாமல் இருந்தால் அதை பொது ஏலத்திற்கு விட வேண்டும். ஆனால் அதை செய்யாமல் ஆங்கிலேயர் காலத்து அவசர சட்டம் போல் கொடுத்துள்ளனர்" என்று பேட்டி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+