வெறி நாய்க்கடி.. 'ரேபிஸ்' பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? தெரிஞ்சுக்கோங்க
சென்னை: வெறி நாய்க்கடி தமிழகத்திற்கு தற்போது புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் பரவும் ரேபிஸ் தொற்று மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நாம் கொஞ்சம் விழிப்பாக இருந்தால் உயிரிழப்பை தடுக்க முடியும்.
இதற்கு முதலில் ரேபிஸ் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொள்வது 'ராக்கெட் சயின்ஸ்' அளவுக்கு கஷ்டம் கிடையாது. முடிந்தவரை எளிமையாக விளக்குகிறேன்.

ரேபிஸ் என்றால் என்ன?
இது ஒரு வைரஸ். நாய் கடி மூலமாக இது மனிதர்களுக்கு பரவுகிறது என்று சொல்லப்பட்டாலும், குதிரை, கழுதை, மாடு, பூனை, வவ்வால், குரங்கு, பன்றி உள்ளிட்ட பாலூட்டி விலங்குகள் கடித்தாலும் இது பரவும். நாம் எப்படி உயிர்வாழ போராடுகிறோமோ? அதேபோல இந்த வைரஸும் போராடுகிறது. ஆனால் அது உயிருடன் இருப்பதை விட, பரவுவதையே நோக்கமாக கொண்டிருப்பதால், அதற்காகத்தான் முயற்சிக்கும். சாதாரணமாக மண்ணில், தரையில் இந்த வைரஸை தூக்கி போட்டால் சில மணி நேரங்களில் செத்து போய்விடும்.
ஆனால் நாய், மனிதர்கள் உடலில் ஓராண்டு காலம் வரை உயிருடன் இருக்கும். அண்டார்டிகா போன்ற அதிக குளிர் நிறைந்த இடத்தில் இந்த வைரஸை வைத்தால் அது பல ஆண்டு காலம் வரை வாழும்.
ரேபிஸ் பாதித்த நாய் ஏன் கடிக்கிறது?
மேலே சொன்னதைபோல, இந்த வைரஸுக்கு உயிருடன் இருப்பதில் பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால், உயிருடன் இருக்கும் நேரத்தில் பரவுவதற்கு அதிக ஆர்வம் காட்டும். எனவே ஒரு நாயின் உடலுக்குள் இது போய்விட்டால், இன்னொரு உடலை தேடும். ஏனெனில் ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாய்கள் சீக்கிரத்திலேயே செத்துப் போய்விடும். அதற்குள் மற்றொரு உடலுக்குள் இந்த வைரஸ் போக முயற்சிக்கும். இதனால்தான் ரேபிஸ் பாதித்த நாய்கள் கடிக்கின்றன.
மட்டுமல்லாது ரேபிஸ் வைரஸ், நாயின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே உணவு எடுத்துக் கொள்ளவும், தண்ணீரை குடிக்கவும் முடியாமல் நாய் தவிக்கும். மட்டுமல்லாது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், பயம், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படும். இதெல்லாம் சேர்ந்து நாய்க்கு வெறியை ஏற்றுக்கிறது. எனவே கடிக்கிறது.
மனிதனுக்கு இது எப்படி பரவுகிறது?
ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டிகள் கடிக்கும் போது அதன் உமிழ்நீர் மூலமாக, வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் நேராக மூளையை நோக்கி பயணிக்கிறது. அங்கு சென்று நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவே நமக்கும் பதற்றம், பயம் இந்த உணர்வுகள் ஏற்படும். தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனால் குடிக்க முடியாது. தசைகள் இறுக்கமாக இருப்பதால் தண்ணீர் உள்ளே இறங்காது. விழுங்கும்போது கடுமையான வலி இருக்கும். இதனால் தண்ணீரை கண்டு பயம் வரும்.

மரணத்திலிருந்து எப்படி தப்பிப்பது?
ரேபிஸ் நோய் தாக்கினால் வலிப்பு ஏற்படுவது இயல்புதான். முடிந்தவரை அதற்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும். வலிப்பு போன்ற நரம்பு தொடர்பான பிரச்சனைகள் தெரிய தொடங்கிவிட்டால், என்ன சிகிச்சை அளித்தாலும் மனிதர்களை காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு தசையாக செயல் இழந்து, கோமா நிலைக்கு சென்று கடைசியாக மரணம் ஏற்படும். இதெல்லாம் வெறும் 10-12 நாட்களில் நடந்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், நாய் உள்ளிட்ட பாலூட்டிகள் கடித்து விட்டால் உடனடியாக கடிபட்ட இடத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அணுக வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி
தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தொற்று தடுப்பூசி இலவசமாக கிடைக்கிறது. எனவே அந்த ஊசியை 0, 3, 7, 14 ஆகிய நாட்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் 28வது நாளில் கூட தடுப்பூசி போடப்படும். நரம்பு மண்டலத்தை வைரஸ் தாக்குதவதற்குள் தடுப்பூசியை போட வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Post-Exposure Prophylaxis - PEP என்று சொல்வார்கள். இதை சரியாக செய்துவிட்டால் 100% உயிரிழப்பை தடுக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
தெரு நாய்களுடன் பழக கூடாது, வீட்டில் வளர்க்கும் நாயை தெரு நாய்களுடன் பழக விட கூடாது, வளர்ப்பு நாய்க்கு தடுப்பூசியை தொடர்ந்து போட்டுக்கொண்டே இருக்க வேண்டும், பூனைகள் நம்மை கடிக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் பூனை கடி மூலம் பெங்களூர் தொழிலதிபர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே பூனைகளிடமும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 20,000 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழக்கிறார்கள். பெரும்பாலும் நாய்கள் மூலம்தான் இந்த உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே பாதுகாப்பாக இருப்போம். உயிரிழப்பை தடுப்போம்.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications