இதென்னப்பா திமுகவுக்கு வந்த சோதனை- சென்னை மேற்கு மா.செ. பதவிக்கான போட்டியில் 2 மாஜி அதிமுக தலைகள்
சென்னை: திமுக எம்.எல்.ஏ.வும் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அந்த இடத்துக்கான அடுத்த செயலாளர் யார் என்கிற விவாதம் நடந்து வருகிறது.
தென்சென்னையில் திமுகவின் முகமாக திகழ்ந்தவர் ஜெ. அன்பழகன். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஜெ. அன்பழகன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு மாநிலம் முழுவதும் திமுகவினரை உலுக்கி எடுத்துவிட்டது.

மேற்கு மா.செ. பதவி யாருக்கு?
இந்த நிலையில் ஜெ. அன்பழகன் வகித்து வந்த சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என்கிற விவாதம் திமுகவில் நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் கு.க. செல்வம், வி.பி. கலைராஜன் இருவருமே தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதில் கு.க. செல்வதுக்கு மேலிடத்தில் நிறையவே ஆதரவு இருக்கிறதாம்.

2 முகங்களும் அதிமுக
ஆனால் இதில் ஒரு விசித்திரம் என்னவெனில் இந்த இருவருமே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்கள். ஏற்கனவே சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக சேகர்பாபு எம்.எல்.ஏ. இருக்கிறார். அவரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்தான். கு.க.செல்வம், கலைராஜன் இருவரில் ஒருவரை மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்தால் சென்னையில் திமுகவின் அடையாளங்களாக மாஜி அதிமுகவினரே இருப்பர்.

பரிதாப திமுக தொண்டர்கள்
எம்ஜிஆர் காலத்திலேயே சென்னையை கோட்டையாக வைத்திருந்த திமுக தொண்டர்களுக்கு இப்படியான ஒரு நிலைமை மிகப் பெரும் ஏமாற்றமும் விரக்தியையும்தான் தரும். ஏனெனில் திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது ஜில்லா கலெக்டருக்கு இணையானது என்று மறைந்த அன்பிலார் சொன்னது ஒரு பக்கம் இருக்க.. இப்போது எல்லாம் பணத்தை தண்ணீராய் செலவு செய்கிற பெருங்கைதான் அப்பதவிக்கு லாயக்கு என்கிற எழுதப்படாத ஒரு நிலைமை உள்ளது.
Recommended Video

உதயநிதிக்கு கிடைக்குமோ?
இதனால் அதிமுகவில் இருந்து வந்த பிரமுகர்களுக்கே கட்சியின் முக்கிய பதவி தாரை வார்க்கப்படுமா? அல்லது கடைகோடி தொண்டனுக்கும் கட்சிப் பதவி வழங்கப்படுமா? அல்லது எந்த பஞ்சாயத்துமே இல்லாமல் முக்கியமான நபர் ஒருவருக்கு பதவி கொடுத்துவிடுவார்களா? என்கிற பட்டிமன்றம் இப்போது திமுகவில் களைகட்டி வருகிறது.
-
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications