Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் நான் இல்லை! உதயநிதி துணை முதல்வராக வரட்டும்! மனம் மாறிய ராதாரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் நான் இப்போது இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் நடிகர் ராதாரவி.

விஜயகாந்த் மறைவை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் பல நினைவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர்.

Radha Ravi has said that he has quit the BJP

அதைப்போலவே நடிகர் ராதாரவி தனக்கும் விஜயகாந்த்துக்கும் இடையிலான நெருங்கிய நட்பைப் பற்றிப் பேசிவருகிறார்.

ஒரு காலத்தில் நடிகர் சங்கம் என்பது ராதாரவியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சங்கம் என்றால், அவர். அவர் என்றால் சங்கம் என்ற அளவில் அதில் ஆதிக்கம் செலுத்திவந்தார் ராதாரவி.

அதன்பின்னர் அவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவர் கையிலிருந்த நடிகர் சங்கம் கைநழுவிப் போய்விடும் என்றநிலையில், அவர் தனது நண்பர் விஜயகாந்த்தைத் தலைவராக்கி மறைமுகமாகச் சங்கத்தை தன் கையில் வைத்திருந்தார்.

Radha Ravi has said that he has quit the BJP

விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் சங்க பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயலாளராக இருந்த சரத்குமாரைத் தலைவராகக் கொண்டுவரப் பல முயற்சிகளைச் செய்தவர் ராதாரவிதான். அந்தக் கூட்டணியும் நடிகர் சங்கத்தில் வலுவாக இருந்து வந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் இளைஞர்கள் சங்கத்திற்குள் புகுந்தார்கள். அதன் தலைமையைக் கைப்பற்ற விஷால் அணி திரட்டினார். சங்க பணத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார் விஷால்.

அதைக் கடுமையாக ஊடகங்கள் மூலமாகப் பேசினார். ஆகவே, சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டன. அதன்பின்னர் சரத்குமார் மற்றும் ராதாரவி நடிகர் சங்கத்தைவிட்டே விலகினர்.

Radha Ravi has said that he has quit the BJP

இதனிடையே ராதாரவியும் அதிமுகவில் தீவிரமாக இருந்தார். சைதாப்பேட்டையில் நின்றும் எம்.எல்.ஏ ஆனார். மீண்டும் அதே தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்தார்.

அதன்பின் கருத்து முரண்பாடுகள் வந்ததால் திமுக பக்கம் போனார். அவர் முன்னதாகவே திமுகவில் பல ஆண்டுகள் மு.கருணாநிதியின் விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார்.

இந்த முறை திமுகவில் இணைந்தவருக்கு நயன்தாரா மூலம் சிக்கல் வந்தது. பொது மேடையில் அநாகரிகமாகப் பேசியதால் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். அங்கேயும் அவர் ஆக்டிவ் ஆக இப்போது இல்லை.

Radha Ravi has said that he has quit the BJP

அண்ணாமலை வருகைக்குப் பின் அவரது இடம் கேள்விக்குறியானது. ஆனாலும் இம்முறை அமைதியாக அடக்கி வாசித்து வந்தார். கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் ஒரு குழப்பம் நீடித்தது. அப்போதும் விளக்கம் அளிக்கவில்லை ராதாரவி.

இப்போது வெளிப்படையாக பாஜகவில் இல்லை என்பதைப் போட்டு உடைத்திருக்கிறார்.

"இரண்டு முறை நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தார். கட்சி ஆரம்பித்த உடனேயே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். யாருமே கேட்கவில்லை. அவரே செய்தார்.

ரொம்ப நியாயமானவர் விஜயகாந்த். அவருக்குப் பதிலாக சரத்குமாரைக் கொண்டுவந்தார். அவருக்காக நான் ஹைதராபாத்திலிருந்த விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினேன். அவர், 'சரியான தேர்வு. அவர் ஒத்துக்கொண்டாரா?' என்று கேட்டார்" என்று தன் நண்பர் விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பேசி உள்ள ராதாரவி, மெல்ல பாஜக விஷயத்தை ஓபன் செய்துள்ளார்.

"திமுகவில் நான் 30 வருஷம் இருந்தவன். 18 வருஷம் அம்மாவுடன் இருந்தவன். இதற்கு மேல் அரசியல் பேசுவதற்கு இங்கு யார் இருக்கிறார்? இப்ப பாஜக வந்திருக்கிறது. வரட்டும், யார் வந்தால் என்ன?

Radha Ravi has said that he has quit the BJP

நீங்கள் பாஜகவில் தானே இருக்கிறீர்கள்? என்றால், "இல்லை. நான் எந்தக் கட்சியிலும் இல்லை. நான் இருக்கிறேனா இல்லையா என்று அவர்களுக்கே தெரியாது" என்று ஒரு ஷாக் கொடுக்கிறார்.

"ஆனால், ஒன்று. கலைஞருடைய குடும்பத்தினர் அந்தக் கட்சியை அழியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். மற்றபடி அதிமுக வரட்டும், திமுக வரட்டும், யார் வேண்டுமானாலும் வரட்டும். ஸ்டாலின் மகன் வருகிறாரே என்று நிறையப் பேர் கேட்கிறார்கள்.

ஏன் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய பதில். தாராளமாக வரட்டும். ஸ்டாலின் திமுகவிலேயே இருந்து கட்சிக்காகப் பாடுபட்டவர். நீங்கள் அவரை குறைத்து மதிப்பிட முடியாது" என்று மனம் மாறி பேசி இருக்கிறார் ராதாரவி.

அவரிடம் துணை முதல்வராக உதயநிதி வரக்கூடியதாகப் பேச்சு அடிப்படுகிறதே என்று கேட்டதற்கு, "பேச்சுதானே? அவர் வரட்டும் பேசுவோம். என்றைக்கும் பேச்சு இருந்து கொண்டேதான் இருக்கும். என்னைக்கூடக் கேட்கிறார்கள். 'நீ திமுகவில் சேரப் போகிறாயா' என்று. நான் அதற்கு, 'அப்படியா? வைத்துக்கொள்' என்று சொல்லிவிடுகிறேன்.

"நான் கூட பிரேமலதாவைத் திட்டி இருக்கிறேன். விஜயகாந்த்தைப் பார்க்க அனுமதி தரமாட்டேன் என்கிறார் என்று. பொய் சொல்லக்கூடாது இல்லையா? திட்டியது உண்மை. ஆனால், அவரது நிலவரம் என்னவென்று நான் நேரில் பார்த்த பிறகே புரிந்துகொண்டேன்.

"சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை கை நீட்டி பேசிய பிறகு அன்று இரவே விஜிமா வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் அதிமுகவிலிருந்தேன். யாருக்கும் தெரியாமல் இரவு போய் பேசினேன். அப்போது கூட, 'அந்த அம்மாவை நான் கை நீட்டிப் பேசவில்லை. யாரோ என் குடும்பத்தைப் பற்றி இழுத்தார்.

அதற்கு மேல் கோபப்படாமல் இருக்க முடியவில்லை' என்று பதில் சொன்னார். யாருக்குத்தான் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் கோபம் வராது சொல்லுங்கள்.

அவர் இயல்பாகவே பாசமான ஆள். யார் மீதும் கோபப்பட மாட்டார். உதவும் மனம் கொண்டவர். கருப்பு எம்.ஜி.ஆர் என்று அவரைச் சொன்னது சரியான வார்த்தை. அந்தளவுக்கு நல்லவன் விஜயகாந்த்.

அவ்வளவு தான தர்மங்களைச் செய்தவர். அவனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா தெரியவில்லை. ஆனால், கடவுள் அவனை இப்படிச் சோதித்திருக்கக் கூடாது. அதான் வருத்தம்" எனக் கண்கலங்குகிறார் ராதாரவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+