ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை ஏமாற்ற முடியுமா? பதுக்கலைனு சொன்னா நம்புவாரா? மூட்டை மீது ஜம்ப் செய்து ஆய்வு
சென்னை: கிடங்குகளில் அதிக நாட்களுக்கு பருப்பை இருப்பு வைப்பது குறித்து தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரெய்டு நடத்தி வருவதால் விலை குறைகிறது என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பருப்பு குடோனில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், குடோன்களில் பருப்பு வகைகளை பதுக்கல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிடங்குகளில் இருப்பதை விட சந்தையில் பருப்பு வகைகள் இருந்தால் மட்டுமே விலைவாசி குறையும்.
3,4 மாதங்களுக்கு மேல் கிடங்குகளில் பருப்பு வகைகளை பதுக்கிவைக்கக் கூடாது. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னை துறைமுகம் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கு செல்லக் கூடிய பருப்பு வகைகள் கூட இங்கேதான் சேமித்து வைக்கப்படுகிறது. உடனுக்குடன் அவற்றை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு வாரமாக நடத்திய ஆய்வு பணிகளால் துவரம் விலை ரூ 138 லிருந்து ரூ 132 ஆக குறைந்துள்ளது. உளுத்தம் பருப்பு விலையும் குறையத் தொடங்கும். தற்போது 2.96 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கையிருப்பில் உள்ளது. பல்வேறு வகையான பருப்புகள் 43 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. தனியார் டீலர்கள் விலை பேசிக் கொண்டிருப்பதாக கூறி குடோன்களில் பருப்பு வகைகள் பதுக்கப்படுகிறது.
இவ்வாறு பதுக்குவது கண்டறியப்பட்டால் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டு பருப்புகளை பறிமுதல் செய்து விநியோகிக்கப்படும். குடோன்களில் அதிக அளவு இருப்பு வைத்துக் கொண்டு வெளியில் குறைந்த அளவு பருப்புகளை கொண்டு வருகிறார்கள். விலைவாசி உயர்வை தடுக்கும் வகையில் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் அரசு நியாய விலைக் கடைகளில் அனுப்பப்படும் பொருட்களில் குறை இருந்தால் உடனடியாக திருப்பி அனுப்புமாறும் அப்படியே விநியோகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். அரிசி கடத்தலில் 16434 வழக்குகள் பதியப்பட்டு 16641 நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் 149 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் ஊழலை ஒழிப்பார். அந்த துறையை மேம்படுத்துவார். அந்த வகையில் அவர் தற்போதுள்ள உணவு பாதுாப்பு துறையில் பருப்பு பதுக்கலை தடுக்க குடோன்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். அவ்வாறு ஒரு குடோனில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ராதாகிருஷ்ணன் அடுக்கி வைத்த மூட்டைகளின் மீது ஜம்ப் செய்து சோதனை செய்கிறார். இதனால் அவர் கண்ணில் இருந்து எந்த மோசடியும் தப்பாது என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications