மக்களை எப்படி நாய்ங்கன்னு சொல்லலாம்? லாரன்ஸ் மாஸ்டர் மன்னிப்பு கேட்கணும்! கொதிக்கும் தாடி பாலாஜி
சென்னை: வாக்காளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார். அரசியலுக்கு வர போவதாக சொல்லும் லாரன்ஸ் மாஸ்டர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய்யைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் ராகவா லாரன்ஸும் தீவிர அரசியலில் இறங்க களம் கண்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்ததை அடுத்து, தனது அரசியல் வருகை குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார் லாரன்ஸ். ஆனால், நேற்றைய தினம் அவர் பேசிய சில விஷயங்கள் தான் இப்போது கோலிவுட் முதல் அரசியல் வட்டாரம் வரை செம சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
"பிரியாணி சாப்பிடும் தெரு நாய்..." - லாரன்ஸ் பேசியது என்ன?
ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸ் பேசுகையில், "ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மைப் பார்த்தால் சத்தம் போடும். சில நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி தான் சாப்பிடும். அதற்கு என்ன பிடிக்கிறது என்று பார்த்து நாம் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வளவுதான்! இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவ, "தேர்தலில் ஓட்டுப் போடும் மக்களைப் போய் ராகவா லாரன்ஸ் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசலாமா?" என்று நெட்டிசன்கள் பலரும் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர்.
நிலைமை கையை மீறிப் போவதை உணர்ந்த லாரன்ஸ், "நான் பேசியதன் அர்த்தத்தை சிலர் தவறாகத் திரித்து அரசியல் செய்கிறார்கள்" என்று உடனடியாக இதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு நடிகர் தாடி பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய சப்போர்ட் லாரன்ஸ் மாஸ்டருக்கு தான் என்று சொன்ன அத்தனை பேரையும் லைட்டா மனசு வருத்தப்படும் படி இரண்டு, மூன்று வார்த்தைகளை பிரயோகித்து பேசி இருக்கீங்க. அது கொஞ்சம் மனசுக்கு சங்கடமாக உள்ளது. நாய்ங்கன்னு சொல்றீங்க.
பிஸ்கட்டு போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும். பிரியாணி போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும்னு சொல்றீங்க. இது ஒரு வார்த்தையா?.
அரசியலுக்கு வரனும் சொல்லி முடிவு எடுத்துட்டீங்க. அப்ப வார்த்தைகளை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும். எனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உங்களுக்கு தெரியும். ஒரு ஆன்மீகவாதி வேற நீங்க. இப்படியெல்லாம் இருக்கக் கூடிய நீங்கள் பொதுவெளியில் இப்படியெல்லாம் பேசலாமா?
மிகப்பெரிய தவறு. எப்படி நீங்க மக்களை நாய்ங்கன்னு சொல்வீங்க. இன்னும் தேர்தல் வரவில்லை. உங்களை வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை.
இப்போ நீங்க பயன்படுத்துற வார்த்தைகளால உங்களை நம்பி வேட்பாளராக நிற்க வைக்கக்கூடியவர்களுக்கும் பெரிய பிரச்சனையை கொடுக்கும். எனவே நமக்கும், நம்மை சேர்ந்தவர்களுக்கும், நம்மை நம்பி ஒரு விஷயத்தை கொடுக்கிறவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. இனிமேலாவது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்க.
மக்களோட மக்களாக ஒன்னே ஒன்னு கேட்கிறேன். நீங்க பேசுன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேப்பீங்கன்னு நம்புறேன் எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் தாடி பாலாஜி.
முன்னதாக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) தீவிரமாகப் பயணித்து வந்த தாடி பாலாஜி, விஜய்யின் உருவப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்டு அப்போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென தவெகவில் இருந்து அவர் விலகினார்.
அதனைத் தொடர்ந்து, லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லின் மார்டின் தலைமையிலான 'லட்சிய ஜனநாயக கட்சி'யில் இணைந்தார். இதனிடையில், சமீபத்தில் அந்த கட்சியில் இருந்தும் அவர் விலகியது அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலாஜியின் இந்த அடுத்தடுத்த முடிவுகள், அவர் மீண்டும் தவெகவிலேயே இணையப் போகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மற்றொரு புறம், "அவர் தவெகவிலேயே தொடர்ந்து நீடித்திருந்தால், இந்நேரம் ஒரு அமைச்சராகக் கூட ஆகியிருக்கலாம்" என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
-
ஒரு பக்கம் விஜய்.. குறுக்கே வந்த ரஜினி - அண்ணாமலை.. ஒரே நேரத்தில் பேசிய ராகவா லாரன்ஸ்.. பின்னணி -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications