வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லை! ஜெம் வீரமணி மீது திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்? ரகுபதி விளக்கம்
சென்னை: ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான வீடியோ ஆதாரங்களில் காட்சிகள் தெளிவாக இல்லாததால்தான் திமுக ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது கூறியிருப்பதாவது: ஜெம் கிரானைட் வீரமணிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை. வீரமணிக்கு எதிராக அக்டோபர் 6ஆம் தேதி புகார் பெறப்பட்டது. அடுத்த நாளே அவருக்கு எதிராக அக்டோபர் 7ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வீரமணி தொடர்பான வீடியோவில் தெளிவான காட்சிகள் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. திமுக ஆட்சியில் வீரமணி வழக்கை முடித்து வைக்கவில்லை.
ஆதாரங்கள் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்பதாகவே திமுக ஆட்சியில் கூறப்பட்டது. இது போல் ஒவ்வொரு விவகாரங்களிலும் உண்மை தெரியாமல் திமுகவுக்கு எதிராக தவெக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஜெம் வீரமணி வழக்கில் யார் தொடர்புடையவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நேரடியாக குதிரை பேரம் நடந்துள்லது. பொய் சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எது உண்மை, எது பொய் என தெரியாமல் மக்களை குழப்பத்தில் வைத்துள்ளது தவெக அரசு.
ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களால் மக்களை குழப்பத்தில் வைத்துள்ளது தவெக சந்திக்க முடியவில்லை.
தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் நிலையை தவெக அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தவெக அரசு ஏற்படுத்தியுள்ளது. இவர்களை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம் என தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர். ரீல்ஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
சிறுமிகளை படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததாகவும், வேண்டுமென்றே வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் வீரமணி, ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர் என்றார். இதற்கு திமுகவின் ஆர்.எஸ். பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பதிலடிக் கொடுத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications
