ரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
Recommended Video
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், 16வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். அதோடு தமிழ்நாடு அரசு இனி அறிவிக்க போகும் திட்டங்கள், அறிவிப்புகளை ஆளுநர் என்ற முறையில் சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

திட்டம்
இதில் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டமான நிபுணர் குழு திட்டம் குறித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட உள்ளது.

குழு
அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
இவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். பொருளாதார துறையில் வல்லுனர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைத்து வரப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது.

சரிவு
போதிய வருமானம் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் பொருளாதார ரீதியாக முடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகுராம் ராஜன் உட்பட பல்வேறு வல்லுனர்களை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது.கண்டிப்பாக தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டு கொண்டு வர இது பெரிய உதவியாக இருக்கும். கொரோனாவிற்கு பின் தமிழ்நாடு வீறுநடை போட இது வழிவகுக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications