தமிழ்நாட்டில் ராகுல் போட்டி! 5லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி? காங். திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாகப் பரவும் செய்திக்கு திருச்சி வேலுச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ராகுல்காந்தி இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

நேரு குடும்பத்தின் விருப்பமான மாநிலமாக உத்தரப் பிரதேசம்தான் காலங்காலமாக இருந்து வருகிறது.
அங்குள்ள அமேதி தொகுதியில் 1984இல் இருந்து ராஜீவ்காந்தி போட்டியிட்டு வந்தார். அதன்பின்னர் 1999இல் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். பின்னர் அந்தத் தொகுதியை மகன் ராகுலுக்காக விட்டுக் கொடுத்தார்.
அவர் 2004 மற்றும் 2014 தேர்தல்களில் போட்டியிட்டு அந்தக் குடும்ப பெருமையைக் காப்பாற்றி வந்தார். அடுத்து 2019 தேர்தலில் சூழல் அவருக்கு ஆதரவாக இல்லை என்றதும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டார். அதுதான் அவரைக் கடைசியில் காப்பாற்றியது.
அப்போது காங்கிரஸ் கூட்டணியிலிருந்த இடதுசாரிகள், பாஜகதான் நமக்குப் பொது எதிரி. அவர்களின் தொகுதியில் நின்று பாஜகவை எதிர்ப்பதைவிட்டு விட்டு அவர் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக உள்ள கேரளாவிற்கு வந்து எங்களை எதிர்க்கிறார் ராகுல். இது என்ன அரசியல் என்று ஆதங்கப்பட்டனர்.

அம்மா சோனியா காப்பாற்றி வந்த அமேதியை ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்துவிட்டு, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் இந்த முறை தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியில் நிற்கலாம் எனப் பேச்சு அடிப்பட்டு வருகிறது.
அதைப்போல் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர்தான் அடுத்த பிரதமராக வருவார் என பாஜகவும் கூறி வருகிறது. ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடலாம் என்றும் சொல்கிறார்கள்.
மோடியைப் பார்த்து தமிழ்நாட்டில் வேண்டுமானால் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று ராகுல் சவால் விட்டிருந்தார். அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மோடி ராமநாதபுரம் தொகுதியில் மோடி நிற்கலாம் என்கிறார்கள்.
அதற்கு முன்பே தன்னை தமிழன் என்று ராகுல் சொல்லி இருக்கிறார். அதனால், வயநாட்டை விட்டு அவர் கன்னியாகுமரிக்கு வரலாம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகமாகவே உள்ளது. வடநாட்டை விடக் காங்கிரஸ் உயிரோடு உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆக, ராகுல் வருவது உறுதி என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராகுல் தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது குறித்த ஒரு கேள்விக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

வேலுச்சாமி தனது பேட்டியில், "கடந்த முறை புதுச்சேரியோடு சேர்த்து 10 தொகுதிகள் கொடுத்தார்கள். இந்த முறை கூடுதலாக 14 சீட்டுகள் கொடுத்தால் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்காகக் குறைத்துக் கொடுத்தால் வருத்தம் என்பது இல்லை.
கூட்டணியில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான் முறை. அதைத்தான் காங்கிரஸ் கட்சியும் செய்யும். கூடுதலாகக் கிடைத்தால் மகிழ்ச்சி என்றே சொல்ல வருகிறோம். எதுவும் பேச்சு வார்த்தைக்குப் பின்னர்தான் உறுதியாகும்.
எங்கள் இலக்கு மோடியை வீழ்த்துவது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. ஆகவே, கூட்டணி சீட்டுகளில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் முக்கியமில்லை. காங்கிரஸ் கட்சி அப்படித்தான் நினைக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் பொது மக்கள் மனநிலை என்பது வேறு. தமிழ்நாட்டை பொறுத்தளவில் நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் மனநிலை என்பது வேறு. அவர்கள் யார் எந்தத் தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள்.

காங்கிரசுடன் இருக்கிறார்களா? பாஜகவுடன் இருக்கிறார்களா? என யோசித்துப் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் உள்ள கட்சி என்ன என்பது முக்கியம்.
ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அப்படி இல்லை. மாநிலக் கட்சியின் செல்வாக்கை வைத்துத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். ஆக, இது நாடாளுமன்றத் தேர்தல். அதில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக்கும் ஒரு பங்கு இருக்கிறது" என்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. கூடவே காங்கிரஸ் தரப்பில் கூட அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்து வருகிறது. அது பற்றி உண்மைத் தன்மை என்ன என்பது குறித்த விளக்கத்தை அவரிடம் முன்வைக்கப்பட்டதற்கு,
"தமிழ்நாட்டில் ராகுல் போட்டியிட்டால் அது எங்களுக்குச் சந்தோஷமான செய்திதான். அவர் கன்னியாகுமரியைவிடத் திருச்சியில் போட்டியிட்டால் இன்னும் அதிக சந்தோஷம் எனக்கு ஏற்படும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது எங்கே? திருச்சியிலா? கன்னியாகுமரியிலா? அதிக வாக்குகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சியைவிட்டுவிட்டு, அவர் ஏன் கன்னியாகுமரிக்குப் போகவேண்டும்?
ராகுல்காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தால், அவர் திருச்சியில் தான் நிற்கவேண்டும். அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டுச் சென்றுவிடலாம். அவரை பிரச்சாரத்திற்கே வரத் தேவையில்லை.
திருச்சியில் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கிறோம் என்று பாருங்கள். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை வெற்றி பெறச் செய்வார்கள். அது உறுதி" என்கிறார்
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடலாம் என்று சொல்கிறார்கள். அது குறித்துப் பேசிய திருச்சி வேலுச்சாமி, "ராமநாதபுரம் மக்கள் பற்றி மோடிக்குத் தெரியவில்லை. அவர் நிற்கட்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர் அங்கே தோல்வியைத் தழுவுவார்" என்று கூறியுள்ளார்
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications