தண்டித்தது தப்புன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லலயே.. ராகுல் வழக்கு குறித்து எச்.ராஜா கொடுத்த புது விளக்கம்
சென்னை: ராகுல் காந்தி விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது உரையின் போது, "மோடி பெயர்" குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்திருந்தது. அதில் நீதிபதி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி பதவியை மீண்டும் பெற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், ராகுல் காந்தி விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தண்டித்ததே தவறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.
வேனும் என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு இன்னும் ஒரு ஓட்டு அவ்வளவு தான்.. நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதற்கும்.. ஒரு ஓட்டு குறைவாக பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications