Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கண்டுபிடிப்பு- ராகுல் காந்தி புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன்" என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்ததை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளியிட்டு பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை! உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதை நாம் கம்பீரமாக சொல்லலாம்.

tamil nadu iron age rahul gandhi

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கி வருகிறது.

இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் உலகுக்கு அறிவித்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் இரும்பு பயன்பாடு- ராகுல் காந்தி புகழாரம்

இதனை தமது எக்ஸ் பக்கத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்து பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் அண்மைய தொல்லியல் துறை ஆய்வுகள் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கண்டுபிடிப்பானது, இந்தியாவின் இரும்பு கால தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை உலகுக்கு வெளிப்படுத்தி நிற்கிறது தமிழ்நாட்டின் இத்தகைய கண்டுபிடிப்புகள்.

தமிழ்நாட்டின் இத்தகைய பங்களிப்புகள், சாதனைகள் நாட்டின் ஒற்றுமை, புதுமையை எதிரொலிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகத்திலும் செழிப்புடன் வெளிப்படும் இந்திய உணர்வுகளை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+