திமுக கூட்டை விட்டு பறக்குதா காங்கிரஸ்? விஜய் பக்கம் சாயும் கதர்கள்? இன்று ராகுல் காந்தி முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக கூட்டணி அரசியல் மீதான விவாதங்கள் முன்னணி கட்சிகளுக்குள் மட்டுமின்றி, புதிய அரசியல் அணிகளையும் மையமாகக் கொண்டு தீவிரமாக நகர்ந்து வருகிறது. அந்தவகையில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி என்பதை இன்றைய தினம் ஆலோசிக்க உள்ளது.. ராகுல்காந்தி இந்த ஆலோசனையை மேற்கொள்வதால், திமுக கூட்டணியும் அதிக ஆர்வத்துடன் இந்த கூட்டத்தை எதிர்நோக்கி உள்ளது....!!
திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளை பலப்படுத்த இரு கட்சிகளும் முழு வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், புதிய அரசியல் கட்சியாக முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் தவெகவும் முக்கிய இடத்தை பிடிக்க போராடி வருகிறது-.

திமுக - காங் கூட்டணி
விஜய் தலைமையிலான தவெக, ஆரம்பத்திலேயே தனித்த அடையாளத்துடன் அரசியல் களத்தில் இறங்கினாலும், கூட்டணி அரசியல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள சூழலில், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிக விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.. காரணம், சமீப காலமாக காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக ராகுல் காந்தி, விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.
தவெக விஜய் - காங்கிரஸ்
மேலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டும் வருகிறது....
அதுமட்டுமல்லாமல் 'ஜனநாயகன்' படத்தின் சென்சார் விவகாரமானது, அரசியல் ரீதியாக பெரிதாக பேசப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்தபோதும், அந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தரப்பில் கருத்துகள் வெளிப்பட்டன. இதுவே தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த யூகங்களுக்கு மேலும் வலுவை சேர்த்தது..
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்த காங்கிரஸ், கடந்த 60 ஆண்டுகளில் படிப்படியாக பலமிழந்துள்ள நிலையில், மீண்டும் கட்சியை வலுப்படுத்த சரியான தருணம் இதுதான் என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ஏற்கனவே கூறியிருந்தார்...
அதனால்தான் தவெக போன்ற புதிய அரசியல் சக்தியுடன் கூட்டணி அமைப்பது காங்கிரஸுக்கு அரசியல் ரீதியாக பலமாக அமையக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது..
இன்று ராகுல் காந்தி ஆலோசனை கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் இன்று ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்திரா பவனில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
2026 தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, அதிகாரப் பங்கு போன்ற விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சிகளின் இடைவெளி
திமுக கூட்டணியில் தற்போது தொடர்ந்தாலும், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. ஆனால் இந்த கோரிக்கைகளை திமுக தலைமையகம் இதுவரை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.. இதனால் 2 கட்சிகளுக்கிடையே இடைவெளி அதிகரித்து வருவதாகவும் கருதப்படுகிறது..
இதற்கெல்லாம் இன்றைய தினம் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. அந்தவகையில் திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது தவெக பக்கம் திரும்புமா என்ற கேள்விக்கு விடை காணும் முக்கிய தருணமாக, டெல்லியில் நடைபெறும் இன்றைய ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications