விலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் "மனிதம்".. சபாஷ்!
ஈரோட்டில் சிறுமியுடன் செல்ஃபி எடுத்து கொண்டார் ராகுல்காந்தி
சென்னை: தன்னிடம் செல்பி எடுக்க வந்த, ஒரு சிறுமியின் மேலாடை சற்று விலகிவிட்டது.. அந்த மேலாடையை ஒருசெகண்ட்டில் அட்ஜஸ்ட் செய்து, தன்னுடைய மனிதத்தையும் உள்ளார்ந்த அன்பையும், வெளிப்படுத்தினார் ராகுல்காந்தி.
Recommended Video

கடந்த வாரம் 3 நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி... கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.. ஒவ்வொரு இடத்திலும் ராகுலை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அந்த வகையில், கரூர் நகர பகுதிக்குள் நுழைவதற்கு முன்பும் அதுபோலவே, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது... திறந்த வேனில் ராகுல் மாரி கவுண்டம்பாளையத்தில் நின்று பேசினார்.. அவரது பேச்சை கேட்க ஏராளமானோர் கூடிவிட்டனர்.. பிறகு பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார்.. அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி, ''அங்கிள்.. நான் உங்களோட ஒரு செல்பி எடுக்கணும்'' என்று கீழே கூட்டத்தில் இருந்து கத்தினாள்.
இதை கவனித்த ராகுல், அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், அந்த சிறுமியை மேலே வாகனத்தில் தன்னிடம் வரும்படி அழைத்தார்.. ஆனால், சிறுமியால் அந்த வண்டியில் ஏற முடியவில்லை என்பதால் அங்கிருந்தோர் கீழிருந்து மேலே ஏற்றிவிட்டனர்.. இன்னொரு புறம் ராகுல் சிறுமிக்கு கையை கொடுத்து, மேலே வாகனத்தில் அழைத்து கொண்டார்.. அப்போது சிறுமியின் டிரஸ் சற்று விலக்கி விட்டது.
அதை கவனித்த ராகுல், டக்கென சிறுமியின் மேலாடையை சரிசெய்தார்.. பிறகு சிறுமியுடன் செல்ஃபியும் எடுத்து கொண்டார்.. வாகனத்தில் நின்று கொண்டு சிறுமியிடம் பேசும்போது, யு ஆர் டைனமிக் சைல்டு என்று சொல்லி கன்னத்தையும் தட்டி தந்தார்... தன்னிடம் அழைத்துக்கொண்டபோது சற்று விலகிய சிறுமியின் மேலாடையை கணநேரத்தில் சரிசெய்ததில், ராகுலின் உள்ளார்ந்த மனிதமும், அக்கறையும் சேர்ந்து வெளிப்பட்டுவிட்டது. இந்த வீடியோதான் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications