அப்படி போடு.. "ராகுல் நாட்டின் பிரதமராவார்".. நெற்றியில் விபூதியை பூசி சொன்ன துறவி.. மிரண்ட பாஜக
ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று கர்நாடக மத துறவி ஆசிர்வதித்துள்ளார்
சென்னை: ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று கர்நாடக துறவி ஒருவர் ஆசீர்வாதம் செய்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருகராஜேந்திர மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என ஆசீர்வதித்தார்.
இன்னும் 9 மாதங்களில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை தேர்தலில் எப்படியாவது, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது..
அதிலும், 224 தொகுதிகளில் 150 தொகுதிகளையாவது கைப்பற்றி ஆட்சியமைக்க பல்வேறு வகைகளில் முனைப்பு காட்டி வருகிறது. இதன்காரணமாக, காங்கிரஸ் சார்பில் நிறுவப்படவுள்ள "வார் ரூம்" இன் சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருப்பதால், கள வேலைகள் மும்முரமாகி உள்ளன..

மடம் - துறவி
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். அந்தவகையில், இன்று சித்ரதுர்காவில் உள்ள ஜெகத் குரு ராஜேந்திர மடம் சென்று ஶ்ரீ சிவமூர்த்தி முருக சரண் அவர்களை நேரில் சந்தித்து, அவரது ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.. மடத்திற்கு ராகுல் காந்தி சென்றபோது, மடத்தின் துறவிகள் அவரை வரவேற்றனர்.. அப்போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்திக்கு திருநீறு அணிவித்து ஆசீர்வதித்தார்...

லிங்காயத்துகள்
அப்போது, ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என்று அவர் ஆசீர்வதித்ததாக கூறப்படுகிறது. இந்த மடம், கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானது என்று கூறப்படுகிறது.. கர்நாடகாவில் 17 சதவீதம் லிங்காயத்துகள் உள்ளனர். இவர்கள் வழக்கமாக பாஜகவையே ஆதரிப்பார்கள்.. அப்படி இருக்கும்போது, ராகுல் பிரதமராவார் என்று ஆருடம் சொல்லி உள்ளது சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.. மடத்தைச் சேர்ந்த துறவியின் இந்த ஆசீர்வாதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சலசலப்பு
இந்நிலையில், மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருக சரண் இதுகுறித்து விளக்கம் தந்துள்ளார்.. "தங்கள் மடத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கமானதுதான், அந்தவகையில்தான் ராகுல் காந்தியை ஆசீர்வதித்தோம்" என்று கூறியுள்ளார்.. எனினும் இந்த பரபரப்பு கர்நாடகாவில் ஓயவில்லை. மடத்தில் சாமியாரை சந்தித்து, அவரிடம் ஆசி பெறும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

லிங்காயத்
அதேபோல, இந்த மடத்திற்கு ராகுல் சென்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. காரணம், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாதான் அன்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.. அதேபோல, அவருக்கு அடுத்து இப்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மையும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரே... எனவே, லிங்காயத் சமூகத்தவர்களை ஈர்க்கும் நோக்கில்தான், ராகுல்காந்தி லிங்காயத் மடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications