சட்டுனு விஜய்க்கு போன் போட்ட ராகுல் காந்தி.. கூட்டணிக்கு கிரீன் சிக்னலா? முக்கிய மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழ வெற்றிக் கழகம், 107 இடங்களை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யை தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பேசியிருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், விஜய்யை ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "விஜயிடம் நான் தொலைபேசியில் பேசி, TVK அடைந்துள்ள சிறப்பான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

Rahul Gandhi

இந்தத் தேர்தல் தீர்ப்பு, புறக்கணிக்க முடியாதது. இளைஞர்களின் ஓங்கி ஒலிக்கும் குரலைப் பிரதிபலிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், அவர்கள் அளித்த ஆதரவிற்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும், அவர்களுக்குச் சேவையாற்றவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் செயல்படும் என்பதை நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தியின் இந்த ட்வீட் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. காரணம், கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதை தனது பின் கூட செய்யமல் விஜய்யுடன் பேசியதை ட்வீட் செய்திருக்கிறாரே! ஒருவேளை இப்போதே கூட்டணிக்கு அடி போடுகிறாரோ? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+