பெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்!
தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை: தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
நன்றாக சென்று கொண்டு இருந்த மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்தே பிரச்னைகள்தான் நடந்து வருகிறது. ஏழை மாணவர்கள் ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் பெரிய பூதாகரமாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோதனை
அதே சமயம் இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை, திருப்பூர் என்று பல இடங்களில் இதற்காக சோதனை நடந்து வருகிறது. சுமார் 17 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

ஏன் இப்படி
தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமித்தது, மாணவர்களிடம் அதிகம் பணம் வாங்கியது, கருப்பு பண புழக்கம் என்று பல மோசடிகள் நீட் தேர்வுக்கு பின் நடந்துள்ளது. இதில் பல பயிற்சி நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி கட்டவில்லை, பயிற்சி நடத்தவும் அனுமதி பெறவில்லை என்கிறார்கள்.

இதனால் சோதனை
இதனால் தனியார் பள்ளி, நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. முக்கியமாக நாமக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. நாமக்கல் க்ரீன் பார்க் பள்ளி , மற்றும் நீட் பயிற்சி மையம் , மற்றும் அதன் தாளாளர் வீடுகளில் வருமான வரித்துறை அ திகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

எப்படி
பள்ளி இயக்குநர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. இதுவரை கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications