தெய்வமே.. எங்க கஷ்டம் உங்களுக்கு கேட்டிருச்சா.. தாம்பரம் டூ திருச்சி.. இரவில் ரயில்வே சர்ப்ரைஸ்
சென்னை: வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி சொந்த ஊருக்கு எளிதாக போகலாம்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் பொதுவாக வார இறுதியான வெள்ளிக்கிழமைகளில் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்படும். இது இல்லாமல் வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் எப்போதுமே விடுமுறை தான். இது இல்லாமல் பலருக்கும் ஞாயிறு விடுமுறை நாளாக இருக்கும். சனிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்து சொத்து ஊருக்கு மாதத்திற்கு இரண்டு முறை அல்லது ஒருமுறை சென்றுவருபவர்கள் அதிகம்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையாய ஜிஎஸ்டி சாலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர் பெரம்பலூர், திருச்சி வரை உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சர்வ சாதாரணமாக தங்கள் இருசக்கர வாகனங்களிலேயே சொந்த ஊருக்கு செல்வதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காணமுடியும்.
அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் கூட்டம் மிக அதிகமாகவே வார இறுதிகளில் இருக்கும். ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். ஆயிரத்தில் தொடங்கி 2000 வரை சர்வ சாதாரணமாக டிக்கெட் இருக்கும் என்பதால், அதில் சாமானியர்களால் வார இறுதிகளில் பயணிக்கவே முடியாது. அதேநேரம் ரயில்களை பொறுத்தவரை வார இறுதிநாட்களில் சொந்த ஊர் செல்ல தவமே இருக்க வேண்டும். பல வாரங்கள் முன்பே டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும். டிக்கெட்டும் கிடைக்காது.
இவர்கள் அன்ரிசவ் ரயில்களில் தொங்கி கொண்டு செல்வதை பார்க்கும் போது, மனம் அப்படியே வெறுத்து போய்விடும். ஏனெனில் அந்த அளவிற்கு பயணிகள் கூட்டம் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் இருக்கும். சென்னை எழும்பூரிலேயே ஏறுபவர்களுக்கு இடம் கிடைக்காது. இந்த சூழ்நிலையில் தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து எல்லாம் ஏறவே முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். வார இறுதி நாட்களில் இதுதான் நிலைமை. இந்நிலையில் வார இறுதியில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்காக தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், வழியாக காலை 6.40க்கு திருச்சி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து ஆகஸ்ட் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழும்புரம் , செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 12ம் தேதி காலை 5.50க்கு வந்தடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications