எல்லாம் ஓவர்.. கிளாம்பாக்கத்தில் நடக்கும் தரமான சம்பவம்.. அதிகாலையே வந்த நல்ல செய்தி.. என்னாச்சு?
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே வரும் இந்த ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது. முதலில் இந்த வருடம் டிசம்பருக்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் மேற்கொள்ளும் வேகத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அடுத்த வருடம் ஜனவரியில்தான் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்டேஷனில் மொத்தம் 2 பிளாட்பார்ம் இருக்கும். ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க, இன்னொன்று லோக்கல் ரயில்கள் நிற்க. இதன் மூலம் இந்த ரயில்வே நிலையம் மல்டி மாடல் ரயில் நிலையமாக மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே நிலையம் ஸ்கை வாக்: சிஎம்டிஏ தரப்பு இது குறித்து வெளியிட்ட தகவலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு இங்கே ஸ்கைவாக் அமைப்பதற்கு கொள்கை ரீதியான தொழில்நுட்ப ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அடித்தளம் அமைக்கும் பணி ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்க உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை அமைக்கப்பட உள்ள பாலத்திற்கு இந்த ஸ்கைவாக் இடையூறாக இருக்க கூடாது என்பதால் இதற்கான தொழில்நுட்ப அனுமதி வாங்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications