களமிறங்குது ஸ்பெஷல் டீம்.. டிக்கெட் எடுக்காமல் போனால் இனி அவ்ளோதான்.. ரயில்வே அமைச்சகம் அதிரடி
சென்னை: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகள் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் இதற்காக சிறப்பு டிக்கெட் செக்கிங்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் கூட, டிக்கெட் எடுக்காமல் பயணிகள் ஆக்கிரமித்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
தொலைதூரங்களுக்கு செல்வது என்றால் பயணிகள் முதலில் விரும்புவது ரயில் பயணம்தான்.. அதிலும் வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புவார்கள். சொகுசான வசதி, அசதி இல்லாமல் தொலை தூரங்களுக்கு சென்று விடலாம்.. டாய்லட் வசதி போன்றவை இருப்பதால் ரயில் பயணமே, பயணிகள் பலருக்கும் பிடித்தமானதாக உள்ளது.

குறிப்பாக பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை பிளான் செய்து கொள்வார்கள்.. ஆனால் சமீப காலமாக ரயில் பயணம் என்பது ரணமாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூட, அவர்களின் சீட்களில் இருக்க இடம் கொடுக்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது.
வழக்கமாக வட மாநிலங்களில் தான் இத்தகைய கதி பயணிகளுக்கு ஏற்படும். ஆனால், கடந்த கோடை விடுமுறை காலத்தில் தமிழகத்திலும் பல ரயில்களிலும் இப்படி முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்துக் கொண்டு பயணிகள் பலரும் பயணித்தார்கள். இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த பயணிகள், தங்கள் பயணத்தை நிம்மதியாக தொடர முடியாத நிலை இருந்தது.
ரயில்வே உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் ரிசர்வ் கோச்களுக்குள் ஏறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் இதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் இருந்தது. சொல்லப்போனால், வந்தே பாரத் ரயிலில் கூட இப்படி ஆக்கிரமித்துக் கொண்டு பலரும் பயணம் செய்தார்கள்.
அதிக கட்டணம் செலுத்தும் பிரீமியம் ரயில்களில் கூட இதுதான் நிலையா? என பயணிகள் புலம்பாத பாடுதான்.. தீபாவளி,பொங்கல் பண்டிகை காலகட்டத்தில் எப்படி இருக்க போகிறதோ என ரயில் பயணிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்து விதிமீறல்களில் ஈடுபடுவர்களை தடுக்கும் வகையில், சிறப்பு டிக்கெட் செக்கிங் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வேயின் 17 மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
டிக்கெட் இன்றி போலீசாரும் அதிக அளவில் பயணிப்பதால் அவர்களையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதி வரையும் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரையும் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் விதிமீறி பயணம் செய்பவர்களை தடுக்கும் வகையில் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த முடிவு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications