திராவிட மாடல் 2.0! அந்த வார்த்தையை ஸ்டாலின் சொன்னதுமே மக்கள் தெறிச்சி ஓடினாங்களே! அண்ணாமலை அட்டாக்!
சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, பார்த்தீர்களா என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.
சென்னை மணலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்த மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கு திருடர் பட்டம் கொடுத்தாரோ, இன்று அதே 2 பேரை வைத்து திமுக முப்பெரும் விழாவை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின், ஒரு மண் குதிரையின் மீது அமர்ந்து காவிரி கரையை நோக்கி போகிறார். வரக் கூடிய ஆற்றின் வெள்ளத்தில் மண் குதிரையெல்லாம் அடித்துக் கொண்டு போன பிறகு, அவர் தப்பிப்பதே கஷ்டமாக இருக்கும்.
மேடையில் அமர்ந்து கொண்டு பாஜகவுக்கு பாடம் எடுக்கிறார். ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் மனதில் நாங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கரூரில் திமுக சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா, சாராயம் விற்ற காசில் தான் நடந்தது. மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தவர் 3 ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தில்தான் இந்த விழா நடந்தது. இதை விட அய்யோ பாவம் என சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
ஸ்டாலின் கண்ணாடி
முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்துவிட்டு எப்படி சம்பாதித்த பணத்தை எல்லாம் வைத்துக் கொண்டு அதில் ஒரு விழா நடத்துறாரு. அந்த மேடையில் எங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த மாநிலமும் ஒன்றுதான் என செல்வப்பெருந்தகை சொன்னது குறித்து கேட்கிறீர்கள். திமுகவுக்கு எடுபிடியாக ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். அந்த கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என மாற்றிட வேண்டும்.
வடகிழக்கு
பாஜக ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்து கொண்டே இருக்கிறது. வடகிழக்கில் ஒரு மாநிலத்தை தவிர, எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில் பாஜக இருக்கிறது. எனவே செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் ஆட்சியில் இருக்கிறது என்பதை கேட்க வேண்டும்?
காங்கிரஸ் அதளபாதாளம்
தமிழகத்தில் காங்கிரஸ் அதளபாதாளத்தில் எங்கிருக்கிறது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அனைவருக்குமே தெரிந்ததுதான். அப்படியிருக்கும் போது அவர் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதாவுக்கு பிறகு
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்ற போது பாஜகதான் காப்பாற்றியது என எடப்பாடி பழனிசாமி கூறியதை நான் வரவேற்கிறேன். வரும் தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சியே தொடர வேண்டும் என முதல்வர் பேசிய போது மழை வந்து மக்கள் கலைந்து சென்றுவிட்டது.
இளிச்சவாயன்
தமிழகத்திலேயே இளிச்சவாயன் ஒருவர் யாரென்றால் அதுநான்தான். நான் எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது, பஞ்சாயத்து தலைவர் கிடையாது. மக்களின் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் கிடையாது. ஆனாலும் நான் ஆண்டுதோறும் எனது வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டு வருகிறேன்.
விவசாய நிலம்
நான் சம்பாதித்து சொந்தமாக ஒரு விவசாய நிலம் வாங்கினாலும் நான் மட்டும் விளக்கம் தர வேண்டுமா? தகவல் உரிமைச் சட்டத்தில் என் நிலம் குறித்து தகவல்கள் கிடைத்துவிடும். சந்தை மதிப்பை காட்டிலும் அதிக விலைக்கு அந்த நிலத்தை அதிகாரப்பூர்வமாக வாங்கியிருக்கிறேன். அரசுக்கு வரியும் செலுத்தியிருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இயற்கை விவசாயம் செய்கிறேன் என்பதை பாருங்கள்.
ரோட்டிலா இருக்கோம்
இதை எதிர்க்கட்சிகள், அப்ப நிலம் வாங்க காசு யார் கொடுத்தது என கேட்கிறார்கள். நானும் என் மனைவியும் வேலை வெட்டி செய்யாமல் ரோட்டில் சும்மாவா உட்கார்ந்திருக்கிறோம்.
கோவையில் நான் வாங்கிய நிலம் குறித்து தாசில்தாரை வைத்து மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்டிய வரியையும் அறிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு எனது வருமான வரிக் கணக்கையும் நான் வெளியிடுவேன். எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது அது குறித்தெல்லாம் யாரும் கேட்கமாட்டீங்க என அண்ணாமலை பேசினார்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள்












Click it and Unblock the Notifications