ஜில்லானது சென்னை....எங்கும் பரவலாக மழை...மக்கள் மகிழ்ச்சி!!
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு இன்று மழை வரலாமா என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மழை பெய்வதற்கான காற்று வீசி வருவதாக தமிழ்நாடு வெதர்மேனும் தெரிவித்து இருந்தார். குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தேவலாவில் 18 செ.மீ, ஆலங்குடியில் 12 செ.மீ, பேச்சிப்பாறையில் 9 செ.மீ, கிருஷ்ணராயபுரத்தில் 8 செ.மீ, கரூர், காய்கேயம், சோலையார் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, வால்பாறை, சூரலாக்கோடுவில் தலா 6 செ.மீ மழையும், காமாட்சிபுரம், அன்னவாசலில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications