பஸ் ஒழுகுதா? கனமழை நேரத்தில் விரைவு பஸ்களை கவனமாக இயக்க வேண்டும்.. போக்குவரத்து கழகம் மேஜர் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கனமழை காலத்தில் விரைவு பஸ்களை கவனமாக இயக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பான உத்தரவுகளும் உடனடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சமீப நாட்களாகவே, அரசு பஸ்களின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி நகர பஸ்ஸில், கண்டக்டர் சீட்டிலிருந்து, நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டு, அவரது தலையிலும் பலத்த காயமும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்து, அடுத்த சில தினங்களில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது... அதேபோல மழை நேரங்களிலும், பஸ்களில் தண்ணீர் கொட்டும் சம்பவமும் அதிகரித்து காணப்பட்டது.. ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பஸ்ஸின் மேற்கூரையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் பஸ்ஸுக்குள்ளேயே ஒழுகியது. இதனால், பயணிகள் சீட்டில் உட்கார முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.
பயணிகள் அவதி: பஸ் உள்ளே பலரும் மழையில் பலரும் நனைந்தபடி செல்லும் சூழல் ஏற்பட்டது.. சிலர் சீட்டில் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.. சிலர் தங்கள் கைகளில் கொண்டுவந்திருந்த குடையை பிடித்து கொண்டே பஸ்ஸில் பயணம் செய்யும் அவலநிலைக்கு ஆளாகினர். இந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் தந்திருந்தது.
இதற்கு பிறகுதான், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தது. அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை துரிதமாக அப்போது முன்னெடுத்திருந்தனர்.. இதையடுத்து, பஸ்ஸில் மழை நீர் ஒழுகுவதாக எழும் புகார்கள் குறைய துவங்கின.
இன்று புயல்: இந்நிலையில், தற்போது மழைக்காலம் தமிழகத்தில் துவங்கியிருக்கிறது. பருவ மழையும் கொட்டி வருகிறது.. சென்னையில் புயலும் இன்று வரப்போகிறது.. இதனால், கனமழை காலத்தில் விரைவு பஸ்களை கவனமாக இயக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருக்கிறதாம்.
அரசு விரைவு பஸ்கள் இயக்கம் குறித்து, காணொலி வாயிலாக நடந்த ஆய்வு கூட்டத்தில், விரைவு போக்கு வரத்து கழக அதிகாரிகளுக்கு, அதன் நிர்வாக இயக்குனர் மோகன் முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியிருக்கிறார்.. அதில் உள்ளதாவது:
அறிவுரைகள்:
- சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதுார பஸ்களை, சாலைகளில் கவனத்துடன் இயக்க வேண்டும்
- சுரங்கப்பாதையில் தண்ணீர் குறைவாக இருப்பதாகக் கூறி, பயணியர் பஸ்சை இயக்க சொன்னாலும், மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில், வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்
- பஸ்களில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால், ஓட்டுநர், நடத்துநர்கள் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த அதிரடி உத்தரவானது, பயணிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications