அடுத்த 1 மணி நேரத்தில்.. தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யப்போகிறது.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் ஆரம்பம் முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை நல்ல மழை பெய்திருந்தது. மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில்
அதன்பிறகு மழையின் தீவிரம் சற்று குறைந்தது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

15 மாவட்டங்களில்..
மேலும் தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு 9 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக..
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று(04.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை எங்கெங்கு மழை
05.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
08.12.2022: தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் மழையா?
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* 04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 05.12.2022: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு (சென்டிமீட்டரில்):
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு: நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 5, புதுச்சேரி, சீர்காழி (மயிலாடுதுறை), திருப்புவனம் (சிவகங்கை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), ராமநாதபுரம், கடலூர், லால்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), புவனகிரி (கடலூர்), தானியமங்கலம் (மதுரை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), தேவகோட்டை (சிவகங்கை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மயிலாடுதுறை, பாம்பன் (இராமநாதபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), மண்டபம் (இராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) தலா 3, காரைக்கால், கெத்தை (நீலகிரி), விழுப்புரம், கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), நாகுடி (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), ஆனைப்பாளையம் (கரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சிதம்பரம் AWS (கடலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), ஆயின்குடி (புதுக்கோட்டை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி). இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications