பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்.. 9 மாவட்டங்களில்.. கோவை, நீலகிரியில் இடி மின்னலோடு வெளுக்குமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. நாளைய தினம் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் அவ்வப்போது வெப்பசலனத்தினால் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ராஜபாளையம், விருதுநகர், திருப்பூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. உத்தமபாளையம், கள்ளிக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி, சோலையாறு பகுதிகளில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல் தேனி, வேலூர், திண்டுக்கல், மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூலை 23ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications