மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
Recommended Video
சென்னை: சிங்கபெருமாள் கோவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் மழைத்தண்ணீர் முழங்கால் அளவு தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமானது முதல் மிதமானது வரை மாவட்டம் முழுவதும் மழைபெய்தது.

சிங்கபெருமாள் கோவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் மழைத்தண்ணீர் முழங்கால் அளவு தேங்கி நிற்பதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களில் செல்லும் வாகனங்களும் வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் முறையாக செய்யாமல் போனதால் மழை தண்ணீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

ஆண்டுதோறும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்காதவாறு கால்வாய் அமைத்து அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். தெரிவித்து ஓராண்டாகியும், அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
உடனடியாக தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருவது வழக்கமாகிவிட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications