கிளம்பிருச்சேப்பா.. ஒரு வாரத்துக்கு மழை விடாது போலயே.. இன்னைக்கெல்லாம் செம மழை விட்டு வெளுக்க போகுது
சென்னை: சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும்நிலையில், தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது, வரும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடந்த சில நாட்களாகவே, பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.

திருச்சி திண்டுக்கல்: திருச்சி, கும்பகோணம், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, தேனி,சேலம், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், உள்நாடு, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மழை காணப்பட்டது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர் என ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 150மிமீ மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
அடுத்த ஒரு வாரத்துக்கு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், மேலும் 16 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மையம்: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேநிலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சென்னை வானிலை மையம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், இன்றைய தினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும்.
புதுச்சேரி: புதுச்சேரியிலும், நாளைய தினம் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இன்று முதல், செப்டம்பர், 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு தமிழக மாவட்டங்களே மழையில் நனைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications