ஹேப்பி நியூஸ்.. 13 மாவட்டங்களில் இன்று வானம் பொத்துக் கொண்டு ஊற்றும்- சென்னை வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், மதுரை முதல் தர்மபுரி மற்றும் காஞ்சிபுரம் வரை சுமார் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி விட்ட நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவுகிறது. கடுமையான புழுக்கத்தை மக்கள் உணர்கிறார்கள்.
இந்த நிலையில்தான் குளுகுளு தகவல் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் நாளை மழை
அது மட்டும் கிடையாது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, விருதுநகர், சேலம், மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

மக்கள் மகிழ்ச்சி
கடுமையான வெப்பத்திற்கு இதமாக இந்த மழை இருக்கக் கூடும் என்பதால் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால் ஆறுகளில் பெருமளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.

வட மாநிலங்கள் நிலைமை
டெல்லி உட்பட வடக்கு உள் மாநில பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதிக்கு முன்பாக பருவமழை கால்வைக்க வாய்ப்பு கிடையாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் பெரும் பகுதிகளில் மக்கள் கடும் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications