புயல் கரையை கடந்திருக்கலாம்.. இனிதான் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யப்போகிறது.. மக்களே உஷார்!
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்து விட்டாலும், இனி தான் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது அதிராம்பட்டினம் பகுதியில் அதிகபட்சமாக 111 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்தப் புயல் முழுமையாக கரையை கடப்பதற்கு காலை 9 மணி வரை ஆகும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

தரை வழியாக
இந்த புயல் கரையை கடந்த பிறகு, தமிழகத்தின் தரைப் பகுதி வழியாக பயணிக்கும். இது மேற்கு ,மற்றும் வட வடமேற்கு திசையில் பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு வழியாக அரபிக்கடலை நோக்கி இந்த புயல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் பாதை
எனவே, புயல் செல்லும் பாதையில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள, கடலூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். புயலின் தாக்கம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ராம்நகர், மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களிலும் எதிரொலிக்கும் என்றும், அங்கும் இன்று மிதமானது முதல் ஓரளவுக்கு பலமான மழை மதியத்திற்குப் பிறகு பெய்யக்கூடும் என்றும் வானிலை இலாகா தெரிவிக்கிறது.

22 மாவட்டங்கள்
புயல் காரணமாக, தமிழகத்தில், கடலூர் துவங்கி கோவை வரை 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை என்பது புயலின் தாக்கத்தை யூகிக்க செய்வதாக உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications