என்ன பேச்சு இது.. அருவெறுப்பா இருக்கு.. சித்தார்த்தை விளாசிய ரெய்னா.. சாய்னாவிற்கு முழு சப்போர்ட்!
சென்னை: சாய்னா நேவாலுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் பாதியில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி இப்படி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக இணையத்தில் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் இது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

சாய்னா
ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்பது பிரதமர் மோடிக்கு ஆதரவாக சாய்னா நேவால் கருத்து தெரிவித்து இருந்தார். சாய்னா நேவாலின் இந்த ட்விட்டை ரீ ட்விட் செய்த சித்தார்த் இரட்டை அர்த்தம் வரும்படி கிண்டல் செய்து இருந்தார். மோசமான கருத்தில் இரட்டை அர்த்தத்துடன் சாய்னாவை சித்தார்த் கிண்டல் செய்து இருந்தார்.

விமர்சனம்
சித்தார்த்தின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதற்கு எதிராக திரையுலகினர், விளையாட்டு துறையினர், அரசியல் வாதிகள், பாஜகவினர் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சித்தார்த் செய்த ட்விட்டை விமர்சனம் செய்திருந்த இந்திய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை விடுத்தது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசுக்கு புகாரும் சென்றுள்ளது.

ரெய்னா கருத்து
இந்த நிலையில் சாய்னா நேவாலுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சிஎஸ்கே அணியில் ஆடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் இந்த நாட்டிற்காக கொடுக்கிறார்கள். சாய்னா போன்ற நமது நாட்டின் பெருமையாக திகழ கூடிய ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிராக இப்படி தரக்குறைவான மொழியில் பேசியது வருத்தம் அளிக்கிறது. ஒரு இந்திய விளையாட்டு வீரராக எனக்கு இது கவலை அளிக்கிறது.

சித்தார்த் சாய்னா
நான் இந்த வேளையில் சாய்னாவுடன் உறுதுணையாக நிற்கிறேன். இந்த அருவெறுக்கத்தக்க விமர்சனத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன், என்று ரெய்னா கடுமையாக விமர்சனம் . கிரிக்கெட் வீரர் ரெய்னா சக விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாக இருக்க கூடியவர். மற்ற வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் இவர் கருத்துக்களை தெரிவித்து உள்ளார். பொதுவில் பல இளம் வீரர்களை பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

ரெய்னா சித்தார்த்
அவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கோபத்தை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது. பொது விஷயங்களில் இப்படி கடுமையாக கோபம் அடைந்து எதிர்வினைகளை காட்டியது கிடையாது. ஆனாலும் இந்த முறை சாய்னா நேவால் விமர்சனம் செய்யப்பட்ட விஷயத்தில் தாமாக முன் வந்து சாய்னாவிற்கு ஆதரவாகவும், சித்தார்த்துக்கு எதிராகவும் ரெய்னா பேசி இருக்கிறார். ரெய்னாவின் இந்த கருத்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications