சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றை போல் இன்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் , ஒரு சிலநேரங்களில், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சூழல் உருவானது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை இருந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. உளுந்தூர்பேட்டை, வண்டிப்பாளையம், குன்னத்தூர், மடப்பட்டு,அரசூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இரவு நேரத்தில், சேப்பாக்கம், திருவில்லிக்கேணி, மெரினா, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம், இன்று முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications