ராஜ் சத்யனுக்கு வந்த ஆத்திரம்.. முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தாங்களா.. "மாஜி மய்ய தலைவரே" ரொம்ப நன்றி
இன்பதுரையை அடுத்து அதிமுகவின் ராஜ்சத்யனும் மநீம தலைவர் கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டதாக கமல்ஹாசன் சித்தரிக்க பார்ப்பது கபட நாடகம் என்று அதிமுகவில் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பி உள்ளது. இதையடுத்து, மநீம தலைவர் கமலுக்கு எதிரான கண்டனங்களும் பெருகி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.. இந்த முறை கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ள கமல்ஹாசன், பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளார்.
நேற்றையதினம் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது, தன்னுடைய விஸ்வரூபம் படம் வெளியானபோது, எதிர்கொண்ட சிக்கலை வெளிப்படுத்தி இருந்தார்.

ராஜ்சத்யன்
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாகவும், அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து, தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.. இறுதியில் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது... ஆனால், படம் வெளியிடுவதில் தனக்கு என்னென்ன பிரச்சனைகள் அந்த சமயத்தில் ஏற்பட்டது என்பது குறித்து நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

கலைஞர் கருணாநிதி
நான் விஸ்வரூபம் என்ற படம் எடுத்தபோது, என்னை தடுமாற வைத்து சிரித்தார் அந்த அம்மையார்.. அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார்.. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள், நான் இருக்கிறேன் என்று இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் என்னிடம் சொன்னார்.. அதற்கு நான், "வேண்டாம் ஐயா... இது நாட்டு பிரச்னை இல்லை. என் சொந்தப் பிரச்னை, நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறினேன். அந்தப் பிரச்னையிலிருந்து மீண்டு என் கடனையெல்லாம் முடித்துவிட்டு, தற்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்திருக்கிறேன்" என்று கமல்ஹாசன் கூறியதுடன், வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்திருந்தார்.

இன்பதுரை சுளீர்
"விஸ்வரூபம் படம் விவகாரத்தில் என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஒரு அம்மையார்" என்று கமல் கூறியிருந்ததையடுத்து, அதிமுக இதற்கு பதிலடி தர துவங்கி உள்ளது.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டார்.. அதில், "இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதால்தான் விஸ்வரூபம் படத்தை அம்மா அரசு தடைசெய்தது... தன்னை தடுமாற வைத்தவர் அம்மா. தேற்றியவர் கருணாநிதி என திமுகவின் ஊதுகுழலான கமல்ஹாசன் பேசியுள்ளார். ஆக முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா. ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் இன்பதுரை.

ராஜ் சத்யன்
இதற்கு பிறகு, மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனும் தன்னுடைய கண்டனத்தை வலிய பதிவு செய்துள்ளார்... இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்தாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

மாஜி மய்ய தலைவர்
இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம். இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும் - திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

தரம்தாழ்ந்த அரசியல்வாதி
இந்த ட்வீட்டை பார்த்ததுமே மய்யத்தின் தொண்டர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. "கமல்ஹாசன், சாதி, மதங்களை வைத்து என்றும் பிழைப்பு நடத்தியதில்லை.. ஒன்றுமே இல்லாத காட்சியை வைத்துக்கொண்டு தங்களின் ஜாஸ் நிறுவனத்திற்கு உரிமை தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய மக்களை திசைதிருப்பி வேடிக்கை பார்த்த அம்மையார் தான் தரம்தாழ்ந்த அரசியல்வாதி என்று சிலர் காட்டமாக பதிவிட்டு, மநீம தலைவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.. மேலும் சிலரோ, அதிமுகவுக்கு ஆதரவை தந்து கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.

ரத்தத்தின் ரத்தங்கள்
"நியாயம் எடுபடாது? திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்ட கமல்ஹாசனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது சாத்தியம் இல்லை என்றும், மாற்று அரசியல் என்று கபட நாடகமாடி வாக்குகளை பிரித்து திமுகவிற்கு மறைமுகமாக தேர்தல் பணியாற்றியவர், இந்த இடை தேர்தலில் நேரடியாக களம் இறங்கி உள்ளார்.. அடுத்த தேர்தல் வருவதற்குள் திமுகவுடன் கட்சியை இணைத்து விடுவார். அந்த கட்சிக்கு தொண்டர்கள் இல்லை என்பது வேறு விஷயம்" என்றெல்லாம் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications