பாலியல் புகார்: முதலில் இல்லவே இல்லைனு சாதித்த ராஜகோபாலன்.. ஒப்புக் கொண்டது எப்படி?
சென்னை: மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன், பின்னர் ஆதாரங்களை காண்பித்தவுடன் ஒப்புக் கொண்டார்.
சென்னை கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக பாடம் நடத்தியதாக புகார்கள் வெளியாகின.
இந்த புகாரை அடுத்து காவல் துறை துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மடிப்பாக்கத்தில் உள்ள ராஜகோபாலனின் வீட்டில் ராஜகோபாலன், அவரது மனைவி, அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜகோபாலன்
வீட்டிலிருந்து ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் அழிக்கப்பட்டன. போனிலும் அவரது கால் ஹிஸ்டரியும் அழிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாரணை
இதைத் தொடர்ந்து ராஜகோபாலனிடம் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தினர். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என கூறியிருக்கிறார். அதை கேட்ட போலீஸார் மாணவிகள் தரப்பில் வெளியான போட்டோக்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்களை காண்பித்தனர்.

ஒப்புக் கொண்ட ராஜகோபாலன்
இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகே தான் செய்த தவறுகளை ராஜகோபாலன் ஒப்புக் கொண்டார். ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புகார் கூறும் மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

லேப்டாப்
இதனிடையே ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னை அசோக்நகர் மகளிர் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications