உள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்!
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தார்.
மதுரை ஆலங்குளம் பகுதியில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

3 சதவீதம் வாக்கு வித்தியாசம்
மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக 46 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை பெற்றுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணி ஆற்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும்.

தலைமைக் கழகம்
கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவே இறுதியானது. தலைமை அலுவலகத்தின் முடிவை முழுமனதாக ஏற்று தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் சசிகலா
இந்தநிலையில் சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது. அவர்கள் துணை வந்தால் தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலை இல்லை என்று கூறினார் ராஜன் செல்லப்பா. சசிகலா தான் வந்து அதிமுகவை காப்பாற்ற போகிறேன் என கூறி வரும் நிலையில் அவரது கருத்துக்கு ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் சசிகலாவின் தயவு
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகின்றன. எப்படியும் இந்த தேர்தலில் வென்றுவிடலாம் என நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். இந்த நிலையில் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications